பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 3 451. நிரம்ப மகிழ்ச்சியை வெளிவிடும் (தரும்) பக்கம் (அன்பும்), விரும்பிக் களிகூரும் தேவசேனையின் கொங்கையும் சிக்கெனத் தைக்க (அழுத்தமாக மனதிற் பதிய, இறுகப் பிணிக்க), (உள்ளம்) நெகிழ்ந்து, உடனே அணைந்த வெட்சி மாலை அணிந்த அழகிய திருப்புயங்களை உடையவன். பெரியோன், குறவர் (வாழும்) காட்டில் (இருந்த) அழகிய கிளிபோன்ற வள்ளிக்கு (வள்ளியை நினைத்து) இளைத்து, உருகிச் சென்று. அவளுடைய அடியிற் பணிந் து, இஷடப்பட்டு (ஆசை பூண்டு), மயல்கொண்டு (மோகம் கொண்டு) தளர்பவன், சத்திவேலைத் திருக்கரத்திற் கொண்டவன், நித்தன் (என்றும் உள்ளவன்), குமரேசன், துதிசெய்கின்ற பரிசுத்தமான பத்திபூண்ட அன்பர்களுடைய துக்கத்தை நீக்குபவன், பச்சைப்பகூகியாம் (மயிலை) நடத்தும் உதவியாளன் - என்றெல்லாம் கூறி அருச்சித்து, என் ஆசையை நிறைவேற்றி, உன் புகழைப் பாடி, வேதங்களின் கூட்ட வரிசையையும், (பிற) எல்லா வற்றையும், துரிய நிலையையும் (தன் மயமாய் நிற்கும் சுத்த உயர் நிலையையும்) கடந்து, தத்துவங்கள் யாவும் (மூலப் பொருள்கள் யாவும்) அழிந்துபோகும் முடிவுநிலைக்கு அப்புறத்தே நிற்கும்படி கண்பார்த்தருளுக. (வேள்வி இயற்ற வேண்டிய) வழி பொருந்தும்படி ஏற்பாடு செய்து (தக்கன்) வேள்வி நடத்திய (கனல்தலம்) அக்கினி குண்டங்கள் இருந்த யாகசாலையுள் நுழைந்து, சக்கரம் ஏந்தும் கடவுள் (திருமாலும்,) தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரி தச்சன் (பிரமனும்) அச்சம் உறும்படித் தாக்கியும் (ஒரு சூரியனுடைய பற்களைக் குத்தியும், ஒரு (இந்திரனாம்) குயிலின் திண்ணிய சிறகை அரிந்தும், எட்டுத்திக்கர் (அஷ்டதிக்குப்பாலகர்களாம் - (ஒரு இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்போர்) அணிவகுத்த கடகமும் (சேனைகளும்) நிலை குலைந்து அழிந்து போம்படிக் கொன்றும், அபிராமி.