பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 9 இருண்டதும், உயர்ந்தெழுந்துள்ளதும், ததும்பி எழும் அலைகள் மோதும் பிறப்பென்னும் பங்கத்து - துக்க கடற்கண் (பிறப்பு எனப்படும் குற்றம் வாய்ந்த) துக்ககரமான கடலிடத்தே), திரு குரும்பை பட்டு (திருகு - குரும்பை பட்டு-பறிபட்டு விழுந்த தென்னங் குரும்பை போல அலைச்சலுற்றுச் சுழன்று. (அந்தப்பிறவிக் கடலில் மிதக்கும்) தெப்பம்போன்ற கரணங்கள் (மனம், புத்தி, அகங்காரம், சித்தம்) முதலியன குடி புகுந்துள்ள பொய்யான இருப்பிடம், இறந்து போனால் இந்த வஞ்சகக் குடிசை வெந்து போகும் கொட்டகை மும்மலங்களின் இருப்பிடம் - (ஆகிய இந்த உடலைச்) சுமந்து, எட்டுத் திசைகளிலும் எல்லா இடங்களிலும் தடுமாறுகின்ற. இவ்வுலக நூல்களைக் கற்றும், கத்தி, இளைத்துப் போகும் சமய சார்பான சங்கங்களை விட்டு விலகி இருக்கும் (உத்தம) குணத்தை அடைந்து, (அத்தகைய சாந்த) குணத் திலேயே உட்பட்டு எப்போதும் (நான்) இருக்கும்படி கண் பார்த்தருளுக. தகுதியுற்ற முறைமையான கற்பு வாய்ந்த கற்பகம் அனையாள், முக்கண் கொண்ட கொடிபோல்வாள், அழகும் சித்ரக்கு - சித்திரத்துக்கு (அலங்காரத்துக்குத்), தரம் (தகுதி யான), (முத்தம் பணி) முத்தாபரணம் தாழும் அல்குலையும் கொண்ட சத்தி (தேவி) (அல்லது, முத்தமால்ை கொண்ட பணி (பாம்பு போன்ற) நிதம்பம் கொண்ட சத்தி (தேவி)-மகிழ்கின்ற குமரேசனே! பரவசம் கெட்டு (பராக்கை ஒழித்து - மனத்தை நிலை நிறுத்தி) எட்டு அக்கரம் (எட்டெழுத்தை "ஓம் ஆம் ஒளம் சிவாய நம" என்னும் எட்டெழுத்தை) தினந்தோறும் போற்றிச் செபிக்கும் அன்பர்களுக்குச் சித்தி (மோகூ! இன்பத்தைத்) தரும் பரமேசர் வணங்கத் தக்க திருவடிகளை உடைய குருநாதனே!