பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 103 36 சந்தேகம் கொஞ்சங்கூட இல்லாமல், நெஞ்சில் சஞ்சலத் தொடக்கம் கொண்டுள்ள மாயையிற் பட்டவனும் - சந்தனம், குங்குமம் இவைகளால் சிங்காரம், ஆடம்பரம், (பரபரப்பு களிப்பு). ஆனந்தம் கொண்ட ம்ாயையிற். பட்டவனும் (ஆகிய நான்) மாதர்களின் கொங்கை முதலிய அங்கங்களின் மேலுள்ள மோகங்களால் வீணாகத் துன்பங் கொள்ளாமல் - வள்ளன்மை (ஈதற்குணம்) வாய்ந்த குகனே! உனது திருவுருவப் பேரொளியுடனே (நீ) வந்து அன்புடன் (என்னை) ஆண்டருளுக; கங்கையைச் சூடியுள்ள பிரானாம் சிவன் மைந்தனே! அழகனே! கந்தனே! விஞ்சையர் (வித்தியாதரர்) ஊரில் இருப்பவனே! (நாங்கள்) நடுக்கங் கொள்ளாதவாறு (எங்களது) இந்திர லோகத்தைக் காத்தருளுக என்று முறையிட்ட் இந்திரன் புகழும் வீரனே! == செங்கைவேல், வெற்றிவேல் கொண்டு சூரன் அழியவே சென்று(அவனைத்) தாக்கின கீர்த்திமானே! செங்கண் (கொண்ட) திருமாலும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தொ ன்ற ஆனந்த வேளே! (திருச்) செந்துாரில் வாழ்கின்ற தம்பிர்ானே (தலைவனே) (வந்து நீ அன்பி லாள்வாய்) 37 சங்கை நிகர்க்கும் மெல்லிய கழுத்து, அந்த வாயிலுள்ள பற்கள்.அழகிய மோக இன்பத்தைத் தரும் முத்துக்கள் என்றும், வானத்தில் -