பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 445 மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஒர் உருவாகச் சென்று, சரீரத்தின் மத்திய ஸ்தானத்தில் நான்கு அங்குல அளவின்மேல், சுழுமுனை, இடைகலை, தோன்றும் பிங்கலை என்னும் நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய - (இம்) மூன்று நாடிகளும் ஒளிவிட்டு, ஒப்பற்ற சூலாயுதம் போல ஒடுகின்ற பிராண வாயுவை (முதுகு தண்டிலுள்ள) சுழுமுனை வழியிற் கணக்காக ஒடச்செய்து - (நெருப்பாறு, மயிர்பாலம் என்கின்ற) நெற்றி (புருவ) மத்தியில் விளங்குகின்ற ஆறாவது ஆதாரமாகிய ஆஞ்ஞை ஸ்தானத்தில் "சி" கார அகஷரத்தொடு பொருந்தி நிறைந்து ஒளிவீசுகின்ற பரம்பொருளின் பாதத்தைப் பெறுதற் பொருட்டு ஞான சதாசிவ நிலையை அடைந்து (அவ்விடத்திற் கேட்கப்படும்) பாடலொலி நாதத்திலும், சிலம்பொலியுடன் கழலொலியிலும் அன்பு பெருகும் படியாக அடியேனுக்கு அருள்வாயே! சூலம், கலைமான், மழு, ஒப்பற்ற துடி, பிரமனது தலை ஒடு, பாம்பு, விளங்கும் தோடு, குழை இவை சேர்ந்துள்ள சிவபிரான் தந்த முருகனே! சூரனது கை, மார்பு, வில், வாள், அழகிய தோள், தலை (இவை யாவும்) து.ாள்படவும், (தேவர்களைச் சிறையினின்றும் விடுவதில்லை என) அவன் கொண்ட சபதம் பாழாகவும், வேலை ஏவிய பராக்ரம மயில் வீரனே! * காலில் அணிந்துள்ள கழலின் ஒலி, சிலம்பொலி, ஒழுங்கான வீரக் காலணியின் ஒலி - ஆக இவ் வொலிகளே யுக முடிவைக் காட்டும் ஒசைகளாகக் திகழும்படி நடனம்புரிபவனே!