பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 முருகவேள் திருமுறை (6ஆம் திருமுறை 446. பொது மகளிர் உறவு அற தனன தனதன தனத்தத் தாத்த தனன தனதன தனத்தத் தாத்த தனன தனதன தனத்தத் தாத்த தனதான அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி விழிகள் கடையினை புரட்டிக் காட்டி அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி யநுராக அவச இதமொழி படித்துக் காட்டி அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி யணியாரம் ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி

  • எழுத வரியிடை வளைத்துக் காட்டி உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி யுறவாடி.

உருகு கடிதட மொளித்துக் காட்டி உபய பரிபுர பதத்தைக் காட்டி உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட மொழிவேனோ, முழுகு t மருமறை முகத்துப் பாட்டி கொழுநர்: குடுமியை யறுத்துப் போட்ட முதல்வ S குகைபடு திருப்பொற் கோட்டு முனிநாடா. † எழுதவளியிடை - இடையின் நுண்மையைக் காட்டும், " இடை தானும் வேதா. ஆனோன் எழுதினா னிலையோ' - திருப்புகழ் 150. t அருமறை முகத்துப் பாட்டி - கனிலமகள். நான்முகன் நாவின்மேவி நான்மறை வடிவாய். வீற்றிருக்கும் அம்மை" சிவரகசியம். "எழுதா மறையும். நிறைந்தாய் சகலகலாவல்லியே" (குமரகுருபரர்). முகம் ஏழாம் வேற்றுமை உருபு முகம் - வடிவு எனலுமாம் - கூன்முகமதி பிரபுலிங்க - கைலாச3 என்புழிப் போல. (அடுத்த பக்கம் பார்க்க)