பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 71 474. பரிசுத்தமான உள்ளத்தை உடைய (தொல்) பழைய அடியார்களிடம் சுத்த மனத்துடன் இஷ்டம் (நண்பு) வைக்காமல் நெருங்கிய பொய்யோடு கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து) சொற் குற்றங்களுக்கு இடம் தருகின்ற வழிகளை நாடியும மயக்கம் பூண்டு "தை" என்ற தாளத்துக்குக் (தற்று உற்று ஒத்து) கட்டன்மந்ததாய் ஒத்ததான (கித்தி). நடனத்தால் வசப்படுத்துகின்ற (பொது) மாதர்களுடைய மயக்கு வார்த்தையில் - (பொய்யில்) - கட்டுண்டு தடுமாற்றம் அடைந்தும், முன்னேற்றம் இல்லாமல் கிழ் நிலையை அடைந்து தளர்ச்சி உறுவேனோ! அத்தத் தத்திக் கத்தற்கு (அ தத்து அத்திக்கு அத்தற்கு அல்லது அத்தி சூத்தற்கு). அந்த மனக் கவலை கொண்டிருந்த அல்லது ஆபத்திலிருந்த (ஆனை) ஐராவதத் தலைவனாம் இந்திரனுக்கும் எய்த்த தவஞ்செய்து இளைத்துப் போயிருந்த (அந்த அத்திக்கு) அந்த யானைக்கும் - (அத்து) சாரும்படி - கூடும்படி - பலம் (உறுதி, தைரியம்). பயன் அளித்தவனே! எய்த்தத் தத்திக் கத்துப் பலமீவாய் - என்பதை எய்த்த அத்த அத்திக்கு அத்து எனப் பிரித்து எய்த்த அத்த' என்பன எய்த்தத்த' என மருவி. எய்த்தத்த அத்திக்கு என்பன எய்த்தத் தத்திக்கு என மருவினதாகக் கொள்ளவேண்டும் எய்த்த அத்த - என்பதில் அத்த - அந்த என்பதன் மரூஉ: எனவே. 'எய்த்த - அந்த - அத்திக்கு எனக் கொண்டு பொருள் காணவேண்டும் இனி. எய்த்த தத்து . இக்கத்து - எனப் பிரித்தால் . இக்கத்து' என்பது இக்கட்டு என்பதன் மரூஉ எனக்கொண்டு. (அத்தன்) இந்திரன் இளைத்திருந்த தத்து - ஆபத்தான இக்கட்டில் கஷ்ட திசையில் பலம் ஈந்தவனே - எனப் பொருள் காண வேண்டி வரும். O அத்திக்குப் பலம் தந்தது திருமால் முருகவேளை யானையாகத் தாங்க நினைத்து மாவிரபுரம்" என்னும் தலத்தில் அருந் தவம் புரிந்தார். அவருடைய (தொடர்ச்சி 72-ஆம் பக்கம் பார்க்க)