பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுட்டம்) திருப்புகழ் உரை 277 (மத 繁 மதமத்தை - பொன்னூமத்தை - ஊமத்தம் பூவை அணிந்தவரும்) நீலநிறம் தொண்ட் கழுத்தை உடையவரும், நித்திநாதர்) என்றும் அழியாதிருப்பவருமான் தலைவுர் அல்லது நி(ர்)த்தம் கூத்த்ாடும் த்லைவர் (சிவபிரான்) மகிழ்கின்ற (சத்தி) பார்வ்தி தேவி பெற்ற குழந்தையே! செழிப்புள்ள முத்துமாலை அணிந்த மார்பை உடைய ஆமுதமயமான தெய்வயானை (அமுதவல்லி யாயிருந்த தேவசேனை), அழகிய முத்தியைத் தரவல்ல மாதுஆம் (தேவசேன்ையின் ) மணவாளனே! சிறையில் (தேவர்களை) வைத்த சூரர்கள் (அந்தத் தேவர்களுக்கு இட்ட) தளை - விலங்கை தறித்தெறிந்தவனே! அல்லது சூரர்களின் (கூட்டக்) கட்டை வெட்டித் தொலைத்த ஞானனே திரு முட்டம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருளிற் பெணோடும் அடிமைக் குழாமொ டருள்வாயே) 765. (சரம் வெற்றி) வெற்றிச்சரம் - ஜயத்தையே தரும் அம்பு, கயல்மீன் என்று உவமிக்கப்படும் வேல் போன்ற கண்கள், வில்லைப்போல வட்டமாக வளைந்த புருவம் (வார்குழல் கார்முகில்) கார்முகில் வார்குழல் - கரியமேகம் போல நீண்ட கூந்தல், (தனமுத்துக்கிரி) - கிரிமுத்துத்தனம் - மலைபோன்றதும் முத்துமாலை அணிந்ததுமான கொங்கை (ஆமெனு நூலிடை நூல் இடையாம் எனும் நூலுக்கு ஒப்பாகும் இடை என்று சொல்லத்தக்க மாதர்கள் (சனு) சரசத்தில் - காம விளையாட்டில் அதிக அன்பு கூடுகின்ற பெரிய காம மயக்கத்தைத் தருகின்ற யுக்தி விளங்குகின்ற (அல்லது முத்தம் விளைவிக்கும்) ஆசையோடு கூடிய பெண்கள், தகுதத் தக்கிட தோதகு திதென நடித்து விளையாடுகின்ற சாமர்த்தியத்தையுடைய துர்க்குணத்தவரான வேசையர், ஆசையொடு கூடியவர், பணத்தை அதிகமாகப் பறிக்கின்ற பேர்வழிகள் (அடிக்கடி குணம்) மாறுபவர்கள், பலவிதமான (நடைபாவனை) மேற் கொள்பவர்கள், பாவிகள், அதிக போகம் (அநுபவித்ததனால்)