பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 449 கொல்கின்ற லீலைகள் செய்பவர், யாரையும் மயக்க வல்லவர் சூதான சொற்களைப் பேசும் கொவ்வைக்கனி போன்ற GlIITaՈԱԱ உடைய பொல்லார்கள், மேலே விழுபவர்போல (வெளியன்பு பாராட்டி) மனத்தை நோவச்செய்து உறவாடுபவர்கள், இருட்டுக்கு ஒப்பான மனக்குற்றம் உடையவர்கள், உள்ளே பகைமை எண்ணம் கொண்டவர்கள், அத்தகைய பொதுமாதர்களின் மாயைச் சூழலிற் சுழல்கின்ற அடியேன் - உய்யவே (பிழைக்கும்படி) உனது அழகியதோள்களும், பன்னிரு கையும், கடப்பமாலையும், திருமுகங்கள் ஆறும், முன்னதாக நான் தியானிக்க ஞான அறிவை நீ எனக்குத் தருவதற்கு வந்தருளுக. கள்ளத் தனமும் மாயையும் நிரம்பிய தாரகாசுரனுடைய பெரிய தலை அற்றுவிழ, நீலமயில் மேலே விளங்கி, ஒப்பற்ற கைவேலைச் செலுத்தி அனுப்பின பராக்கிரமம் வாய்ந்த முருகனே! கல்லின்மீது அழகிய திருவடி பட்டவுடனே அந்தக் கல் நல்ல ரூபத்துடன் (பெண் உருவாய்) வரக் காட்டிடையே (அகலிகைக்கு உற்ற (கெளவை) துன்பம் (அல்லது பழிச்சொல்) நீங்கச்சென்ற பூரீராமபிரானது மருகனே! (48 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) அகலிகை நிரபராதி என்று சுழியற் புராணம் கூறும்; குறைவிலா உனது வடிவினின் வந்தான் குலிசனென் றறிந்திலேன் இசைந்தேன், கறையிலா எனது மனநிலை ஐய நாடொறுங் கண்டுளே தெளிந்து, பொறையுடனதற்குத் தக்க செய்யாமல் இகழ்ந்து கல் லாகெனப் புகன்ற அறிவிலா முனியே யிக்கொடுஞ் சாபம்

  • தசரத ராமன் கால்துகள் படக் கன்னியாய்... வருவை எனலும் கல்லாய் வீழ்ந்தனள்"- சுழியற் புராணம் - கெளதம 9, 10.