பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 131 மேகம் போன்ற கரிய கூந்தலின் நீழலிலே காதுவரைக்கும் ஒடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட அழகிய கய்ல் மீன்போல (கண்கள் போல) - (ஆடவரையும் துற்விகளையும் காமப் பித்தேற்றிக் கொல்லும் கண்போலக் கொல்ைத் தொழிலைக்கொண்ட) காலன் - என்னுடைய உடலைவிட்டு என் உயிரைப் பிரிக்கத் தேடிவருகின்ற அந்தத் தினத்தில் (உனது) காலை (திருவடியை) மறவாமல் (புகல்வேனோ). சொல்லும் பாக்கியத்தைப் பெ றுவேனோ! Զ-ԹՆ)55 ம் (தாங்கி) வாழ்விக்கும் சர்ப்ப ராஜனான சேடனைத் தன காலிற் கட்டவல்ல பசுந்தோகை வாகனமாம் மயிலில் ஏ பாய்கின்ற மதம் கொண்ட மத்தகத்தை உடைய விநாயகரொடு மாறுபட்டு, முன்பொருகாலத்தில், (உலகை) வளைந்தோடி வந்த ஏழைக் குழந்தையே! சூரர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவனே! தேவர்களுக்குக் காவற்காரனாய் விளங்குபவனே! பச்சைத் தினைப்புனத்தில் இருந்த மயில் போன்ற (வள்ளியுடன்) நன்றாகப் பொழுது போக்கிக் காவலிருப்பவனே! தமிழ் வேதச்சோதி) தமிழ் மறை (தேவாரத்தை) அருளிய சோதி மூர்த்தியே! (மங்கலம்) வளரும் திருவானைக்காவிற் பெருமாளே! (அல்லது - தமிழ்ப்ரியனாம் வேதச் சோதியாகிய சிவபிரான்) (அல்லது - தமிழ்ம்றை - தமிழ் வேதமாம் தேவாரப்பாக்களைப் பெற்ற சோதியாம் சிவபிரான் வீற்றிருந்தருளும் திருவானைக்காவிற் பெரும்ாளே! (காலை மறவாமற் பணிவேனோ) O வள்ளிவேளைக்காரன்:- வள்ளியோடு பொழுது போக்குபவன் எனப் பொருள்படும். குருவி. ஒச்சிய..திருமானை. தொழுது என்றும் பொழுது போக்கிய பெருமாளே." திருப்புகழ் 118 திருவேளைக்காரன் வகுப்பு :- (அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் - பக்கம் 185 . பார்க்க).

  • தமிழ் வேதம் சம்பந்தர் அருளியது. காழி நற்றமிழ் ஞான சம்பந்தன் மறைவளரும் தமிழ்மாலை "11-67-11.