பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 445 கரும்பாலையிற் (சாறுபோக) கோதாக நிற்கும் சக்கைபோலச் சற்றேனும் ஈரம் (கருணை) யில்லாத மன அன்புடனே உறவு கொண்டவர் போல்பவர், யாரைப் பிடித்தால் (யாரொடு உறவு பூண்டால்) காசு கிடைக்கும் என்ற ஒரு எண்ணத்தையே நினைவாகக் கொண்ட காரணத்தால் . மேகத்துக்கு ஒப்பான கூந்தலை யுடையவர், பொன்னாலானதோடு என்கின்ற ஆபரணத்தை அணிந்த காதை வந்து மோதுகின்ற காலதூதர்களுடைய கைவேல் போலுள்ள நீண்ட விழிகள் என்கின்ற வலையைக் - காமக் கடலில் முழுகிய-காமிகள் மீதிற்பட்டு அவர்கள் அதிற்சிக்கும்படி எறிகின்ற தந்திரவாதிகள், நீலி என்னும் பேய்போல நடிக்க வல்லவர்கள் - அத்தகைய பொது மாதர்களின் மீது காமங்கொண்டு (உறவாகை) ஆசைப்படுதல் இல்லாத வழியை அருள்புரிவாயாக சூரர்களை அழிப்பதற்கே எனத் தோன்றிய சிங்கம்போல, நீலக் கலாபம் கொண்ட மயில்மேல் ஏறி, புழுதியால் கடல் நிரம்பி தூர்ந்துபோக - மறைய, அசுரர்களின் போர்க்களத்தே ரத்தமே ஒரே ரூபமாய் - ரத்தமயமே விளங்க (அடு) போர் புரிந்து, தானத் தானன தானன தானன என்று (பாடி)ச் சூழ்ந்துகொண்டு பல பேய்க் கூட்டங்கள் ஆடிக் கூத்தாடச் சண்டை செய்த வேலனே! வீரத்தில் வல்லவனான ராவணனுடைய தலை அற்றுவிழி * அம்பைச் செலுத்தின், மேகமொத்த ாேனிேேே உடைய திரும்ாலின் மருகனே! பிரமன் முதலான தேவர்கள் பூசைசெய்து 鷺 வாழும் புலியூரில் (சிதம்பரத்தில்) மேன்லக் கோபுர வாசலில் விற் ಘೀ5Sಿಥಿ (அருள் புரிவாயே) (44- ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) ". மலரவனும் ஆர் அழலாடு நிலையம் வணங்கா நிழல்சிவகங்கா தர நீறார் தலைவ புயங்கா பரண் இரங்காய் தக என்றான்" - கோயிற் புராணம் - நடராசச் சருக்கம் 62)