பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 17 661. அஷ்டகிரிகளும் பொடிபட நடனம் செய்கின்ற மயில், செவ்விதான (அன்றலர்ந்த புதிய) கடப்பமலர், சிறுவாள், வேல், திருமுகக் கூட்டமாம் (நூற்றிதழ்த்) தாமரை - (தாமரை போன்ற ஆறு திருமுகங்களின் தோற்றம்) - திவ்யமான திருக்கையிற் பொருந்திய போர் செயவல்ல கோழி (இவைகளைக் கொண்ட. கணவா!) (சேவல் - பொரு... கணவா - கோழி - இவையெலாம் பொருந்திய (வள்ளி) கணவனே! எனலுமாம். அகில் மரத்தின் அடியைப் பறித்து எறியும் திரைவீசும் அருவிகள் பாய்கின்ற (ஐவன வெற்பில்) மலை நெல் விளையும் வள்ளி மலையில் வாழ்வுற்ற வஞ்சிக்கொடி போன்ற வள்ளியின் கணவனே! என்று உலகெலாம் உணரச் சொல்லும் சொற்களால் அல்லது உனது அழகிய திருவடிகளைப் பெற முடியுமோ! (பெற முடியாது என்றபடி). ஒப்பிடுதற்கு அருமையான சிவத்தின் சேயே பரமனே! (அல்லது மேலான - அல்லது பரமனிடத்தில்) வாக்குக்கு எட்டாததான (அல்லது வசனம் இல்லாத தான மெளனப்) பிரசங்கத்தைச் செய்த குருநாதனே!