பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 10 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 490. மாதர்மீதுள்ள மயக்கு அற தனதான தந்த தனதான தந்த தனதான தந்த தனதான மயலோது மந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும். மறிபோலு கின்ற விழிசேரு மந்தி மதி நேரு கின்ற நுதலாலும்; அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை வளையாலும் அறிவே யழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ மயிலேறி யன்று நொடிபோதி லண்டம் வலமாக வந்த குமரேசா. tமறிதாவு செங்கை அரனா ரிடங்கொள் மலைமாது தந்த முருகேசா, நயவா னுயர்ந்த மணிமாட மும்பர் நடுவே நிறைந்த மதிசூழ நறைவீசு கும்ப குடமேவு + கம்பை நகர்மீத மர்ந்த பெருமாளே (40)

  • உலகை வலம் வந்தது - பாட்டு 184, பக்கம் 430 பார்க்க

t மான் ஏந்தியது - பாட்டு 286 பக்கம் 210 கீழ்க்குறிப்பைப் பார்க்க

  1. கம்பை - கம்பையாறு : " கம்பை சூழ்தரு காஞ்சியந் திருநகர்"

கந்த புராணம் 1-23.9.