பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில் திருப்புகழ் உரை 327 இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இவ்வாறே பிறந்து பிறந்து, இவ்வாறு ஆய்க்கொண்டு வருவது ஏனோ! இனிமேல் (ஒ. சித்திடில்) யோசித்துப் பார்க்கின் சீசி சீசி இழிவானது இந்த மாயமான மாயை (வாழ்க்கை); இதன் சிக்கினிலே அகப்பட்டு மாய்கின்ற அடியேனை - அறிவுத்துறையில் பயில்வித்து முத்தமிழ் வல்ல புலவர்கள் ஒதுகின்ற உனது விசித்திரமான அல்லது அழகிய ஞானமயத் திருவடியைத் தந்தருளுக: நாள்தோறும் உன்னை ஒதிப் போற்றுபவர் களின் உள்ளமே இருப்பிடமாக அதில் நடனம் புரியும் ஆறுமுகவனே! அருவமும் (உருவ மின்மையும்) உருவம் உண்மையும் உள்ளவர், பாதி உருவம் பச்சை நிறத்தினர், மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவர் பெற்ற குழந்தையே! (ஆதிசேடனது) (பை) படங்கொண்ட தலைகள் - பெரிய ஆயிரந்தலைகளின் மேலே கிறிக்கிழிக்கும் (பத்திர பாதம்) நொச்சிப் பத்திரம் -நொச்சியிலை போன்ற கால்களை உடைய (அல்லது பத்திரம்). வாள் போன்ற நகக் கால்களை உடைய) நீலமயில் வீரனே! பசிய இளங் கமுகமரத்தின் பாளையின்மீது (மடலின்மீது) செய் - வயலில் உள்ள கயல்மீன் தாவுகின்ற வேளூர் என்னும் தலத்தில் விருப்புடன் வீற்றிருக்கும் (அரி, அயன், அரன், எனும்) மூவர் பெருமாளே! தேவர் பெருமாளே! (ஞான பாதம் அருள்வாயே) 785. பாடகம் (ஒருவகைக் காலணி), சிலம்பு, இவையுடன் சிவந்த மணிகள் கோக்கப்பட்டது போல ஒன்று சேர்ந்து அசைகின்ற அழகிய கால்களை உடையவர்கள், (பாவை சித்திரம்) சித்திரப்பதுமை போல்பவர்கள், பட்டு உடை அணிந்துள்ள (நூல் இடையார்) நூல்போல நுண்ணியதான இடையை உடையவர்கள்