பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை) திருப்புகழ் யை WI). 525. மனம் வேறுபாடு, பகைமை, வஞ்சகம் இவைதமைக் கொண்ட விசித்திரமான பேதையராம் மங்கையர்கள் மகிழ்ச்சியுடன் உறவாடுதலைக் கண்டு மோகத்தால் . அறியாமை (மடமை) (உறா) உற்று பூண்டு, மற்று ஏதம் அகலாமல் அதனால் குற்றங்குறைகள் எனைவிட்டு நீங்காது. பேதம் (வேறுபாட்டினை - மாறுதலை அடையும்) இந்த உடலை விரும்பிப் பாதுகாத்து வெளியே உலவாமல் (சாதகம்) பிறப்பும், விகாரம் (பாலன், குமரன், கிழவன் என்னும்) வேறுபாடும், (சாதல்) இறப்பும் ஆகிய இவை தொலைய, குறைவு இலாத உயிராக (என் உயிர்) விளங்க, மனத்தால் உனது - (தாரை) கூர்மைகொண்ட, வடிவை உடைய (அல்லது மிகக் கூர்மையான வேலையும், கோழியையும், தினைப்புன மலைச்சாரலிலிருந்த வேடர் மான் வள்ளியையும் தியானிக்க மாட்டேனோ! (போதகம்) யானை, மயில் இவைகளின்மேல் மலராசனம் இட்ட மத்தியஸ்தானத்தில் எழுந்தருளி வருகின்ற * அண்ணாமலை வீதியில் உள்ள கந்தவேளே! (போதகம்) யானை ஐராவதம் வளர்த்த (கலாபக் கோதை) மயில்போன்ற தேவசேனை வாழ்ந்த பழைய விண்ணுலகத்தார்கள் சென்றிருந்த சிறையினின்றும் அவர்கள் மீளவேண்டிப் போருக்கு எழுந்த வேலனே! பெரும் பாபச்செயல்களையே செய்த காலாட் படைகளை உடைய சூரன் முதலானோர் வீழ்ந்து மடியவும், மண்ணுலகும் விண்ணுலகும் வாழுமாறும் கருணைபுரிந்த தலைவனே! (உனது) திருவடி மலரை நினைந்து ஞான பூசனை செய்து (உன் திருப்புகழைப்) பாடும் தொண்டர்களுடைய தோழத் தம்பிரானே! (வேலை, சேவல் தனை, மறமானைச் சிந்தியேனோ)