பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 494. மோகூடிம் பெற தனதனாத் தத்த தந்த தனதனாத் தத்த தந்த தனதனாத் தத்த தந்த தனதான அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்புகழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச் சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளிய மோ கூதத்தை யென்று அருள்வாயே: "இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து இடபமேற் கச்சி வந்த உமையாள்தன். இருளை நீக் கத்ர்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த இறைவர்கேட் கத்த குஞ்சொ லுடையோனே, குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று குருவியோட் டித்தி ரிந்த தவமானைக் +குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த குமரகோட் டத்த மர்ந்த பெருமாளே (44)

  • மாற்றற்ற செம்பொன்" மாற்றறியாத செழும் பசும் பொன்னே" அருட்பா

t தவஞ் செய்தருள நோக்கிக் குழைந்து "அம்மை அருந்தவம் புரியத் தரிப்பரே அவள் தனிப் பெருங் கணவர். எம்பிராட்டிக்கு மெல்லியரானார் என்றும் ஏகம்பர்'. மாதுமெய்ப் பயன்கொடுப்பவே கொண்டு வளைத்தழும்புடன் முலைச்சுவடணிந்தார்' பெரிய புராணம் திருக்குறிப்பு:57, 65, 66.

  1. குணமதாக்கி. வடிவு காட்டினது

"முகமாறுடைய பிரான் - கன்னிதனையோர் கடிகாவினிற் கலந்து துன்னு கருணை செய்து தொல்லுருவங் காட்டினனே" -கந்த புராணம் 6.24.115. குணமதாக்கி - தெய்வக் கோலத்தை வள்ளிக்கு அருளியது. 'அறுமுகம் உடைய வள்ளல். நங்கைதனை யருளோடு நோக்க.. குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி, முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்றதன்றே". கந்த புரா.6.24.197.