பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1037

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 846. முருகா என தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தனதான நீலமுகி லாணகுழ லாணமட வார்கள்தன நேயமதி லேதினமு முழலாமல். நீடு.புவி யாசையொரு ளாசைமரு ளாகியலை நீரிலுழல் மீனதென முயலாமற்; காலனது "நாt வரவ வாயிலிடு தேரையென காயமரு வாவிவிழ அணுகாமுன்.

  • நாவார்த்தை-நம்பி நாவினுள் உலக மெல்லாம் நடக்கும்'

- சிந்தாமணி 316. இங்கு வார்த்தை என்பது காலன் வைது உயிரை இழுத்துச் செல்லும் வார்த்தைகள், அத்தகைய வைதற்சொற்கள் அணுகாமுன் அருள் தாராய் என்றார்: காலன் திட்டுகின்ற வைதற் சொற்களை பின்வரும் பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகளின் பாடலிற் பரக்கக் காணலாம்: "என்ன செய்குவாய் மனமே-நாளை எமனிடத்தில்-நீ என்ன செய்குவாய் மனமே! நாளைக் கறுத்த உருவமும் பருத்த உடலமும் கனலைப்போல விழியும் தனதில்லாத மொழியும் கண்டவ ரஞ்சிடு பாசமும் இரு தண்டகமாகிய குலமும் ஈட்டுக் கருநிற மாகிய எருமைக் கடாவினில் ஏறி ஒரு இமைப் பொழுதினிற் பெருவரை போலவே சிறிக் கால துரதருடன் கூடியே - இந்த ஞாலந் தனிலே உன்னைத் தேடியே கண்டு, அடியார்க்குத் தொண்டு, செய்யாமல் நித்தம் உண்டு, உறக்கம் கொண்டு, பெண்டு பிள்ளைக் குழைக்கும் பேயே அட என்று கட்டிக் கரமதனால் கிட்டிச் சிரசுதனில் குட்டித் திறமாகவே திட்டி, உலகுதனில் ஒட்டிக் கிரட்டியாகிய வட்டி வாங்கிப் பையில் கொட்டி, அதை இருப்புப் பெட்டி தனிலே வைத்துக் கெட்டி செய் திட்டு வைத்த மட்டீ! (தொடர்ச்சி 479ஆம் பக்கம்)