பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 663 நெருங்கிப் பொருந்திப் பழகியும், மனம் களிப்பதற்கு இடமாயுள்ள வரும், (மோகிதம்) காம மயக்கச் சுகக் கடல் போலுள்ளவருமான மாதர்கள் - பகைத்து விலக்கத்தக். கவர்களே என்று நான் நினையாமல் இருப்பதற்கு ஆதரவை மிகக் காட்டும் (பசு) ஜீவான்மா, (பாசம்) தளை - மும்மலக் கட்டு, (அகிலம்) ஆக எல்லாவற்றுக்கும் அதிகனே - மேம்பட்டவனே! நிறைபொருளே! (புரணம் ஆகர) ஒளிக்கு இருப்பிடமானவனே! கடவுளாகிய உன்னிடத்தில் (நேரும்) உள்ள திருவருளால் (மெய்)-உண்மைப் பொருளை நான் உணர மாட்டேனோ! ஒளி வீசுகின்ற ஆயிரக் கணக்கான கிரணங்களை வீசுபவனும், உதய காலத்தில் இருளை ஒழிக்க வல்லவனும், (தன் தேரில் பூட்டபட்டனவும்) வேகமாகச் செல்ல வல்லனவுமான ஏழு குதிரைகளைக் கொண்டவனுமான சூரியனுடைய பிள்ளை எனப்பட்ட அங்க தேசத்து அரசனான கர்ணன் அம்புகள் நிறைந்த போரில், (அயல்) தனக்குப் புறம்பாயிருந்த பகையாயிருந்த பேடி) அருச்சுனனுடைய - (கை) கை அம்பால் (படுபோது) இற்ந்து படும்போது (சன்னிதியானவன்) (அந்தக் கர்ணனுக்குப்) பிரத்யகூடிமாய்த் தரிசனந் தந்தவனும் (திருமாலும்), (விதி) பிரமனும் ஆக இருவரும் தேடின - தனது அடிமுடியைத் தேடிய (திருவாள்) செல்வநாயகனான (அரன்) சிவபிரானது குமரனே! பக்கங்களில் உள்ள ஊர்கள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் மயில் வாகனனே! பலவகையான கலைமான், (உழை) பிறவகைய மான் (அல்லது பசு), புலி, யானைகளையும், அகில், சந்தனம், இவைகளையும் தள்ளி வீசிக்கொண்டுவரும் காவிரிநதியின் (வண்டல்) நீர்மண்டிய பொடிமண் உள்ளதும், தொடர்ச்சி. 'அடிமுடி தேடிய வரலாறு பாடல் 319, பக்கம் 292, பாடல் 535-பக் 222 கிழ்க்குறிப்பு. o அயலூர் பக்கத்தில் உள்ள ஊர்கள் - "ஊரூர் கொண்ட சி ர்கெழு விழவினும் * . திருமுருகாற். (தொடர்ச்சி 664 ஆம் பக்கம் பார்க்க)