பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1020

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்கண்) திருப்புகழ் உரை 461 எத்தகைய வேதத்துக்குள்ளும் நீயே தாய்போல மூலப்பொருளாய் நிற்கின்றாய்! பரிசுத்த பராக்ரம திறமை. வாய்ந்த வீரனே! திரனே! எட்டிகுடிப்பதியில் வீற்றிருக்கும் வேலனே! வானோர் (அல்லது பெரியோர்க்குப்) பெருமாளே! (நீ தான் வருவாயே) எண்கண் 839. சந்தனத்தை நிரம்பப்பூசிச் சேர்ந்து, குங்குமம், கடம்பு, விளங்கும் சண்பகம், இவ்ை நெருங்கி விளங்கும் திரண்ட் தோள்கள் விளங்க. தண்டையும் அழகிய சிலம்பும் ஒலிசெய, வெண்டையம் (வீரக்காலணி) சலன்சல் என்று ஒலிக்க, (சஞ்சு இதம் உருவம் இனிதாக அமைந்துள்ள (சதங்கை) ಫಿನ್ಲಿ கொஞ்சுவது போல ஒலிக்க, மயில்மீது ஏறி. திந்தி மிந்தி மிந்தி மிந்தி.தனந்தனென்று (சென்றசைந்து) மெல்ல அசைந்து உகந்துவந்து மகிழ்ச்சியுடன் வந்து கிருபையுடனே-(என்) மனமாகிய அழகிய கோயிலிற் புகுந்து, 7ಿಣ್ಣೆ புகழ்ந்து, அறிந்து செவ்விய பதங்களைப் பணிந்து இருப்ப்ாயாக’ என்று மொழிந்தருளுக. அந்த மந்தி - பேர்போன அந்தக் குரங்கு அநுமாரைக்கொண்ட இலங்கை வெந்து அழியவும், இடும்பகொடுஞ்செயலைக் கொண்ட (கண்டன்)-வீரனாம் ராவணனுடைய உடலும் அழிபட்டு, (அரங் கொள பொடியாக) அரத்தினால் ராவினதுபோலப் பொடியாக. துாளாக எனவும், அரசன் சிற்பியின் மற்றொரு கையையும் வெட்டினான் என்றும், இரண்டு கையும் அற்ற நிலையிற் சிக்கலிற் பின்னும் அழகிய முருகன் உருவத்தை அந்தச் சிற்பி அமைக்க முருகவேள் அச் சிற்பியின் மீது உகந்து அவன் அமைத்த மயில் மீதிருந்தபடியே விண்ணில் அவனையும் அழைத்துப் பறந்து மறைந்தனர் எனவும் கர்ண பரம்பரைச் சேதி கூறும்

  1. சஞ்சிதம்-சஞ்சு இதம் சஞ்சு சாயல் X சிந்தை அம் குலம் - மனமாகிய அழகிய கோயில்.