பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திக்கரிை திருப்புகழ் உரை 627 செம்மணிகள் (பத்துத் திக்கும் வெயில் பரவு) பத்துத் திக்குகளிலும் ஒளி வீசி மிக்க அ நிறைந்து, (மதர்) செழிப்புடன் விளங்கும் (மகுட) 激?」 முடியை உன்டயவனே! குதித்துக் குதித்து (தாவித் தாவி) வளர்கின்ற (அணிய) வரிசையாக உள்ள (அல்லது அழகிய) கயல்மீன்கள் தாவிக் குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டில் வீற்றிருக்கும் பெருமாளே! (பொற் கழல்கள் தருவாயே) அத்திக்கரை 900. (தொக்கை) உடலின் தோலைக் கழுவி, (பொன் தகும் உடை) அழகு உள்ள ஆடையைக் கட்டிக்கொண்டு (கலன் இட்டு) ஆபரணங்களை அணிந்து, (கடி தரு) வாசனை வீசுகின்ற சொக்குப்புலி - மயக்கி வசப்படுத்தவல்ல (புலி) சாந்தை அப்பி-(அப்பிக் கொள்பவர்களை) - நிறையப் பூசிக்கொள்பவர்களாகிய மாதர்களைப்-புகழ்ந்து அதனால் வரும் களிப்பால் -களிப்பு மயக்கால். பரிசுத்தமான நிலையை நீக்கி கைவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதியை அ நுசரியாது நடந்து (அகத்தை) பாபச் செயல்களைச் செய்யும் ஐம்புலன்கள் முதலாய் பல சுற்றத்துடன் உற்று - ஐம்புலன்கள் முதலாய் பல சுற்றம் போகும் வழியே போய் - (புலன்களை அறிவு கொண்டு அடக்காமல் விட்டு) இந்தப் பூமியின்கண் நான் அலைச்சல் உறாமல. (காமம், வெகுளி, மயக்கம் எனப்படும்) முக் குற்றங்களையும் நீக்கிப் பல கலைநூல்களையும் கற்றுப் பிழையான வழிகளை நீக்கி ஒழித்துத் தன்னை அறிந்த பரிசுத்த ஞானிகளுக்கு அடிமை பூண்டு அத்தகைய ஒழுக்கத்தால் விளக்கமுறும் அறிவு கொண்டு முத்தியை அடையக்கூடிய தவநிலையை அடைந்து, கதி (மோகூடிம்) தரக்கூடிய (சத்தை) உண்மைப் பொருளைத் தரிசித்துக் கரையிலாத எல்லைக்குட்படாத முத்தி என்னும் கடலுள் (நான்) புகுமாறு வரம் தந்தருளுவாயாக