பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 55 கொண்ட நடன பதங்கள் திருச்செந்தூராகிய (இத்தலத்திலும்) என் முன்பே ச்ொஞ்சி நடனத்தைக் கொள்ளும் (கொண்டன); கந்தவேளே! குறமங்கை (வள்ளி) கொங்கையின் அழகிய மணத்தை நுகர்ந்து சுகிக்கும் (தம்பிரானே) குடமுநி (அகத்தியர்) கும்பிடும் தம்பிரானே! (கண்களும் முகங்களும் என்றன்முன் சந்தியாவோ) 17 திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும். திங்களுடைய (நிலவின்) பிளவு என்னும்படி ஒளி விடுகின்ற வெண்ணிறப் பற்களையுந், தொங்குகின்ற மயிர்த்தலையையும் கொண்டவனும், பேரொலியும், தண்டாயுதமும், கொடுங் கோபமும் கொண்டவனுமான யமனுடைய ஒலை அது வரும்போது உயிரானது அங்கும் இங்குமாக (ஊசலாட) பறையும், திமிலையும் (பறை வகை), பேரொலி மிக்க தம்பட்டம் (முதலிய) Ꮮ❍ (வாத்தியங்கள்) ஒலிக்க, உறவினர் கதறி அழக் கொண்டுபோம் சந்தி (பல தெருக்கள் கூடும் இடம்) தெரு வழியே எம்முடைய பொருள்' என்னும் பற்று இல்லாமல், ஒரு குண்டு மணியின் பிளவளவு தினையளவு (கூடப்) பங்கிட்டு உண்ணுதற்குச் சோர்வு பட்ட பெரும் பழி நீங்க, இன்றைக்கு (ஆகட்டும்) நாளைக்கு (ஆகட்டும்) என எண்ணாமல் இடுவாயாக உடனே' என்னும் உணர்வு அழிந்து போக, எடுத்துக்கொண்டுபோய் டுடு டுடுடு, டுன்டுட் எனப் போகின்ற விதியை நினைத்து, நெஞ்சத்தே அஞ்சிப் பகிர்ந் து கொடேனோ (ஈதல் புரியேனோ)? 1. நடனம் - குடைக் கூத்தும் துடிக் கூத்தும்.