பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 முருகவேள் திருமுறை (3- திருமுறை குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள் குமுற வளையி னொலிமீற: இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும் இடையு மசைய மயில்போலே, இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ. மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல் விஜய கிரி சொல் அணிவோனே விமலி அமலி நிமலி குமரி கவுரிதருணி 2வியின கெமனி யருள்பாலா, பழைய மறையின் முடிவி லகர மகர உகர i படிவ வடிவு முடையோனே. பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ பழநி மருவு பெருமாளே. (32) 132. மயில்மேற் காட்சி பெற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான தகர நறுமலர் பொதுளிய குழலியர் கல்க கெருவித் விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தணயர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு 'தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர; 1. அருணகிரியார் வாக்கு என்பதில் இந்த அடி ஐயத்தை எழுப்புகின்றது. 2. புறங்காட்டிடை நேரிழையோடும்-ஆடி சம்பந்தர் தேவாரம். தென் குரங்காடுதுறை. 3. பனசம்- பலா 4. தவனம் ஆசை.