பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி திருப்புகழ் உரை 389 திரிபுரம் எரிந்து . கரும்பு வில்லைக் கொண்ட ந்து மன்மதன் с Г விழவும், புன்சிரிப்பாலும் திருக்கண்களா லும் அருள் புரிந்த மெய்ஞ்ஞான குருநாதனும் - இலக்குமி, சரஸ்வதி, மகேசுரி ಕ್ಡ இவர்களது தலைவர்களாகிய திருமால், ГTLDгт, ருத்திரன் என்பவர்கள் ஒதிப் போற்ற திருநடனம் புரியும் நாதனும் ஆன சிவபிரான் அருளிய குழந்தையே! தேவர் தலைவனும், பிரமனும், மாலும் ஒலமிட அசுர கோடிகள் தூளாமாறு செலுத்திய மெய்ஞ்ஞான வேலாயுதனே! சுகம் பாலிக்கும் குறமகள் வள்ளியின் மணவாளன் என்று வேதங்கள் பலவும் போற்றி செய்து புகழ, பழைமை வாய்ந்த பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே! (சிவகதி பெற பாதம் அருள்வாயே) கடலை, பொரி, அவரை, பலவகைப் பழங்கள், கரும்பு இவைகளை உண்ணும் வலிய வளைவு உள்ள தொப்பையையும் அதிசயமான - மதம் பாய் சுவடு உள்ள இடங்கொண்ட மும்மதத்தையும், தாமரையிதழ் போன்ற சிறிய கண்களையும், யானை முகத்தையும் கொண்ட கணபதியின் சகோதரனே! வடமலையாம் மேருவின் சிகரங்கள் அதிரும்படி ஒரு நொடிப் போதில் (உலகை) வலம்வந்த மரகத (பச்சை) மயில் வீரனே! வேள்விக்குத் தலைவனான இந்திரன் தந்த மகளாம் தேவசேனை, குறமின்னாளர்ம் வள்ளி என்னும் இருவருடனும் பொருந்திய (காம) லீலைகளைக் கொள்ளும் மணவாளனே! வலிமை கொண்ட (அல்லது போர்செய்த) அசுரர்களுடைய குலம் முழுதும் மடியவும், சிறந்த தேவர்களுடைய சிறை நீங்கவும் அழகு மிகுந்த