பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 முருகவேள் திருமுறை (3- திருமுறை பொருதுக் கையிலுள அயில் நிண_முண்கக் குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப் புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் குமரேசா; படியிற் பெருமித தகவுயர் செம்பொற் கிரியைத் தனிவலம் வர அர னந்தப் 'பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் பதனாலே. பரன்வெட் கிடவுள மிகவும்.வெ குண்டக் கணியைத் தரவிலை யென அருள் செந்திற் பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் பெருமாளே. (18) 3. வீரை நகர்’ 118. பொது மகளிர் மயல் அற தானா தனதன தானா தனதன தானா தனதன தனதான ஆதா ளிகள்புரி கோலா கலவிழி யாலே யமுதெனு மொழியாலே. ஆழ்சி ரிள நகை யாலே துடியிடை யாலே மண்மலி குழலாலே, சூதா ரிளமுலை யாலே யழகிய தோடா ரிரு குழ்ை யதனாலே. சோரா மயல்தரு மானா ருறவிடர் சூழா வகையருள் புரிவாயே! சோதா ரிருகழல் சூழா தது தொழில் பூணா நீ மதியாதேபோரா டிய அதி ஆரா பொறு பொறு போகா தென அடு திறலோனே: 1. பலன் - பழம். 2. வீரை வீரையூர் என்னும் பேருள்ள சிவஸ்தலம் ஒன்று திருப்பெருந்துறைக்கு மேற்கே 10 நாழிகை தூரத்தில் உளது. (பார்த்திபனூருக்கு அருகில்) (இராமநாதபுரம் மாவட்டம்). 3. குழை - செவி, திருப்புகழ்24-ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க