பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 37 முற்கால உரை: பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதும் அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து கொடுப்பதும் மழையாகும். தற்கால உரை: பெய்யாமல் கேடு செய்யவும் மழையால் முடியும், அவ்வாறு தன்னால் கெட்டுப் போவதற்குத்துணையாக நின்று பெய்து, நன்மை. செய்யவும் மழையால் முடியும். புதிய உரை: உடல், உளவறுமைகளை அழித்தவர்கள் மேலும் உயரவும், இவற்றிலிருந்து அழிக்கமுடியாதவர்கள் முயன்று முன்னேறவும், மழை பெருந்துணையாய் எல்லாமாக இருந்து உதவுகிNது. விளக்கம்: மக்கள் வாழ்வு நிலையில் மேம்பட வறுமையை அழிக்கவும், வளத்தைக் கொடுக்கவும் மழை உதவுகிறது என்பதை வள்ளுவர் படிப்படியாகப் பரிணாமப் படுத்திக் காட்டுகிறார். 16. விசும்பின் துளிவிழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண் பரிது பொருள் விளக்கம்: விசும்பின் = வானத்தின் துளிiழின் = மழையின் துளியானது வீழ்வது அல்லால் = இல்லாமல் போனால் மற்றுஆங்கே - மண்ணுலகின் மக்களிடையே பசு(ம்) = உயிரின் புல் = மருவுகிற புணர்ச்சியும், உருவாக்குகிற செயல்களும். தலைகாண்பது - செழிப்பில்லாமல், காப்பாற்றப்படாமல் அரிது = நடைபெறுவது அரிதாகிப் போய்விடும். சொல் விளக்கம்: பசு = உயிர், ஆன், சீவனுடையது, சீவான்மா புல் = புணர்ச்சி; புல்குதல் மருவுதல், புணர்தல், அணைதல் தலை = சிறப்பு, முதல், விரிவு தலைகாணுதல் = பரிபாலித்தல் களிகூறுதல், செழிக்கச் செய்தல்.