பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 45 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. பொருள் விளக்கம்: பனுவல் = கல்விப் புலமை, மிக்க ஆய்வுகளால் ஆக்கப்பட்ட நூல்களின் துணிவு = தெளிவான நோக்கமும் முடிந்த கொள்கையும் குறிக்கோளுமான விழுப்பத்து வேண்டும் = நன்மையும் மேன்மையும் தருகின்ற " வழிமுறை களின்படி. ஒழுக்கத்து = நீரோட்டம் போல் ஒழுகுகின்ற ஒழுக்க வாழ்வை வாழ்பவரே o நீத்தார் பெருமை - முற்றுந் துறந்த மாமனிதர் என்ற பெருமையைப் பெறுகிறார் சொல் விளக்கம்: பனுவல் = நூல், புலமை, கல்வி, ஆராய்ச்சி, துணிவு = தெளிவு, நோக்கம், முடிவு, கொள்கை, குறிக்கோள் விழுப்பம் = ஆசை, சிறப்பு, நன்மை, மேன்மை ஒழுக்கம் = நீரோட்டம் போல, தடையின்றி தொடர்ந்து நடைபெறும். அறச் செயல்கள். முற்கால உரை: தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. தற்கால உரை: ஒழுக்கத்தின் நிலைபெற்றுத் துறந்தவர் பெருமையே பெருமைக்குரியன பலவற்றுள்ளும் சிறந்தது என்பது, உயர்ந்த நூல்களின் முடிபாகும். புதிய உரை: கல்விப்புலமை மிக்க ஆய்வுகளால் ஆக்கப்பட்ட நூல்களின் தெளிவான நோக்கமும் நன்மையும் மேன்மையும் தருகிற நீரோட்டம்போல் ஒழுகுகிற ஒழுக்க வாழ்வும் வாழ்பவரே முற்றுந் துறந்த மாமனிதர் என்னும் பெருமையைப் பெறுகிறார்.