பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6Ꭾa , திருக்குறள் புதிய உரை 41 ۔“ முடியாமல் போகின்றன. உலகமக்களின் ஆய்வறிவும் கூர் அறிவும் குன்றிப் போகின்றன. ஒட்டு மொத்தமாக இந்த உலகம் படுகின்ற பாடுகளை வள்ளுவர் இந்த எட்டாவது குறளில் எடுத்துரைக்கின்றார். 19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் பொருள் விளக்கம்: தானம் மக்கள் வாழுமிடம், அரசன் வாழும் கோவில், சக்தி உயிர்நிலை; தவம் = காடு, தீ, வெப்பம், போன்ற இரண்டு = இருபெரும் வீடும் காடுகளும் தங்கா = பயன்தராமல் போகிற ஆவியனுலகம் = வேறுபாடும் பெருமையும் நிறைந்த உலகமானது சிறப்புடையது; வானம் = வானம் தருகிற மழையானது. வழங்காது எனின் = பொழியாமல் போகிறபோது. சொல் விளக்கம்: தங்கா = தடைபடாது; வியன் = பெருமை, வேறுபாடு வியனுலகம் = தேவருலகம்;தவம் = காடு, தீ, வெப்பம், புண்ணியம், கற்பு, வாகை, விரதம், நோன்பு: தானம் - உறை விடம் , பதவி, சக்தி, உயிர்நிலை, இருப்பிடம், கோயில் முற்கால உரை: o அகன்ற உலகின்கண் தானமும் தவமுமாகிய இரண்டறமும் மழை பெய்யாதாகின் உளவாகா. தற்கால உரை: இப்பெரிய உலகத்தில் மழைபெய்யாது என்றால் கொடை, தவம் என்னும் இரண்டும் அவற்றைச் செய்வார் இல்லாமல் நீங்கும். புதிய உரை: வானம் தருகிற மழையானது இல்லாமல் போகிற போது, தானம், தவம் ஆகிய இருபெரும் வீடுகளும், காடுகளும் செழித்துப் பயன்படாமல் வேறுபாடு அடைந்து பெருமை குன்றவே உலகமானது சிறப்பிழக்கிறது. விளக்கம்: மழை வளம் குறைகிறபோது, மக்கள் உறையும் உறைவிடம், மன்னர் வாழ்கிற கோவில் வாழ்க்கையின் பெருமைக்குரிய சக்தி மற்றும் உயிர்நிலையாக விளங்குகிற ஒழுக்கமும், காடு மற்றும்