பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் # ".

இந்த வயதில், தன்னேடொத்த சிறுவர்களுடன் ( து கொண்டு கும்மாளம் போடுகின்ற பருவத்தில்,எல்லாவற்றை யும் துறந்து, கொண்ட தன்லட்சியத்தில் ஒன்றிப் போளுன். கடும் பயிற்சி, நேர்மையான பழக்க வழக்கங்கள், தேவை யான ஒய்வு, உறக்கம் என்று தன் வாழ்வு முறையை ஒழுங்கு படுத்திக் கொண்டான்.

இசையில் ஆ ைச, மீன் பிடிப்பதில் பேராசை என்ற வழக்கங்களைக்கூட கட்டுப்படுத்திகொண்டு,"ஒன்றேலட்சியம், ஒன்றே கொள்கை, அதுவே வாழ்க்கை’ என்று பயிற்சிகளைத் தொடர்ந்து, விதிமுறைகளுடன் பயிற்சிசெய்த போர்க், 17ம் வயதில் உலகத்தின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவகை உயர்ந்தான்.

உலகத்திலேயே சிறந்த போட்டி என்பது இங்கிலாந்தில் தடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியாகும். அதில் தனது 19ம் வயதில் முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றதோடல்லாமல், மூன்று ஆண்டுகளும் தொடர்ந்து (1976,1977,1978) வென்று ஒரு புதிய சாதனை யையே படைத்துவிட்டான். 41ஆண்டுகளுக்கு முன்னேஇங்கி லாந்து வீரன் ஃபிரட் பெர்ரி (Fred Perry) என்பவர் நிகழ்த் திய சாதனையை, 1978ம்ஆண்டு மாற்றிஅமைத்தான் போர்க்.

போட்டிகள் நடக்கின்ற நாட்களில் 9மணிநேர உறக்கம். இரண்டு 2மணி நேரம் பயிற்சி. ஆனால், விருந்துகளிலும், கலந்து கொள்வதில்லை என்ற மனத்திண்மையுடன் உடல் வளத்தைக்காப்பதில் மன்னனுக் விளங்குகிருன் போர்க்.

போரட்டம் நிறைந்த விளையாட்டுப் போட்டியில் கோபம் அடையாது, தன்னிலை இழக்காது, நற்பண்புகளுக்கு இலக்கணமாகத் திகழ்வதால்தான், போர்க்கின் புகழ்இன்று உலகமெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது. பெண் ரசிகைகள் தனக்கு அதிகம் உண்டு என்ருலும், அதிலும் அடக்க உணர் வோடு நடந்து கொள்ளும் திறமையில் போர்க் ஒரு முனிவகை விளங்குவதால் தான், மூன்று மணி நேரம்