பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 35

நடைபெற்றது. க ல ந் து .ெ கா ஸ் ள ப் போ கி றே ன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, ஒவன்ஸ் பதமாக்கும் பயிற் சிகளைச் செய்துகொண்டு ஒடத்தொடங்கும் இடத்திற்கும் சென்ருகிவிட்டது,

முதுகு வலியுடன் நிற்கவும் முடியாமல், நிமிரவும் இய லாமல் திணறிக்கொண்டிருந்த வீரன் ஒவன்சிடம், அவனது பயிற்சியாளர் லேரி ஓடிவந்து, நீ ஒட வேண்டாம். உன்னல் முடியாது' என்று பரிந்து பேசிய வுடன், இன்று நான் ஒடா விட்டால், இனிமேல் எந்த ஒட்டப் பந்தயத்திலுமே கலந்துகொள்ள மாட்டேன்’ என்று பதிலளித்ததைக் கண்டு, பயிற்சியாளர் சற்றுப் பின் வாங்கி நின்று கொண்டார். ஆமாம்! ஜெசி ஒவன்சின் வலிமை யான மனதின் உறுதியான சொல் அல்லவா அது! ஆகவே அவனைப் பந்தயத்தில் கலந்துகொள்ளுமாறு அனுமதியும் அளித்தார்.

முதுகு வலியும் வேதனையும், 100 மீட்டர் ஒட்டத்தில் ஒடுவதற்காக கோட்டில் வந்து நிற்கும்வரை தான் நிழலாக வந்தது. உங்களது இடத்திலே இருங்கள் என்று ஒடவிடு பவரின் அதிகார ஒலி ஆரம்பித்து, துப்பாக்கிச் சுடும் ஒசை வரையிலும் வலி தெரிந்தது. அதன் பின் ஓவன்ஸ் ஒடத் தொடங்கியதும், வலியும் வேதனையும் களைப்பும் இளைப்பும் எங்கு போனதோ தெரியவில்லை.

100 மீட்டர், 200 மீட்டர், தடைதாண்டி ஒட்டம் (Hurdles) நீளத்தாண்டும் போட்டி அத்தனையிலும் கலந்து கொண்டாகி விட்டது. அப்போழுது அவன் ஆ ற் றி ய சாதனையைப்பாருங்கள், போட்டிமாலை 3.15 க்குத் தொடங் கியது. 100 கெஜ தூரத்தில் வெற்றி பெற்றவுடன், அவன் ஒடிய வேகத்தின் நேரம் 9.4 வினாடிகள், அது உலக சாதனையாக இருந்தது.

அடுத்த போட்டியானது 3.25க்கு நீளத்தாண்டுவதில் போட்டி. அவன் தாண்டிய துரம் 26 அடி 8 அங்குலம். அதுவும் உலக சாதனையாக அமைந்தது.