பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எஸ். நவராஜ் செல்லையா

(23அடி) என்ற சிறப்புப்பட்டத்தையும் பெற்றுவிட்டாள்.

அவரது பயிற்சியாளர் ஐகர் டெர்ஒவனேஷ்யன் என்பவர் கூறும்பொழுது, 100 மீட்டர் தூரத்தை 115வினடி களில் ஒடி முடிக்கின்ற ஆற்றல் உடைய இந்த மங்கை, வருகிற மாஸ்கோ ஒலிம்பிக் பந்தயத்தில் 7.5 மீ. (24.8') தூரம் கூட தாண்ட முடியும் என்று நம்புகிறேன்’ என்று நம்பிக்கைத் தெரிவிக்கிரு.ர்.

ரஷ்ய நாட்டிலுள்ள லித்தானியா எனும் பகுதியில் ஒரு விவசாயியின் மகளாகத் தோன்றி மாபெரும் சாதனை புரிந்த அந்த மங்கையின் பெயர் வில்மா பார்டாஸ்கின் ((Wilma Bardaaskiene) 6765rl 145rt Gilb.

தாய்மையும், காலில் துன்பமும் வந்த பொழுதும் கலங்கிப் போகாமல், உலக சாதனை நிகழ்த்திப் பெரும் புகழ் பெறவேண்டும் என்று உற்சாகமாக உழைத்து உயர்ந்த வில்மா, நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாக அல்லவா ஒளிர்ந்து கொண்டிருக்கிருள். நட்சத்திரத்தைப் பார்க் கின்ற பொழுதெல்லாம், நாமும் அப்படி வரவேண்டும் என்ற ஒர் எண்ணம் தோன்றியும், அதன்படி நாமும் நடந்து விட்டால், நம் நாட்டு இளைஞர்களிடையே இப்படி ஒர் அற்புதம் நிகழ்ந்து விட்டால், நமக்கெல்லாம் பெருமை தானே! அந்த நாளை விரைவில் எதிர்பார்ப்போம்!