பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

அதோ! ஒரு 68 வயது இளைஞர் ஓடுவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

ஏதோ தவறு செய்துவிட்டு, தப்பிப் பிழைப்பதற்காக அவர் தன்னை தயார்செய்து கொண்டிருக்கிறாரோ என்னவோ என்றுகூட நீங்கள் நினைக்கலாம்!

யாரிடமோ ஒருவரிடம் பேச்சு வாக்கில் சவால் விட்டுவிட்டு, அந்தச் சவாலை நிறைவேற்றுவதற்காக ஓட முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றுகூட நீங்கள் நினைக்கலாம்!

அவரைச்சுற்றிப் பலர் வியப்போடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அதனால், அவர்கள் மத்தியிலே, சுலபமாகப் புகழ்பெற்று பிரபலமாகி விடலாம் என்பதால், ஓடப்போகிறார் என்று கூட நினைக்கலாம்!

68 வயது ஆளுக்கு ஏன் இந்த ஓட்டவேலை? அதுவும் வேண்டாத வேலை என்றுதானே நினைக்கிறீர்கள்!

வி.உ. -3