பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

55

குழந்தையா? அல்லது குழந்தையே பிறக்காமல் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு தவமிருந்து பெற்ற தலைக் குழந்தை என்றால், அதுவும் இல்லை. அவளுக்கு 19 குழந்தை பிறந்ததில், இந்த நோய்வாய்ப் பட்டிருக்கும் குழந்தை 17வது குழந்தை.

பதினேழாவதாகப் பிறந்த இந்தக் குழந்தை, இந்த உலகத்தைப் பார்க்கத் தொடங்கிய நேரத்திலிருந்தே, பெற்றேர்களை உபத்திரவப் படுத்திக்கொண்டேதான் இருந்தது. வறுமையின் எல்லைக்கோட்டிலே வதிந்த அந்தக் குடும்பத்தில் உருவெடுத்துத் தோன்றிய அந்த பெண் குழந்தை பிறந்தபோது இருந்த எடை4½ பவுண்டு தான்

பிறந்த குழந்தை பிழைக்குமா மரிக்குமா என்ற, அச்சமும் கவலையும், பெற்றோர்களுக்கு முதல் நாளே முளைத்தெழுந்தது என்றாலும் குழந்தை இறக்கவில்லைய்யே தவிர பிழைக்கின்ற கட்டத்திற்குள்ளும் வரவில்லை. எண கொஞ்சங் கொஞ்சமாகக் கூடி வந்தாலும், இதயத்தில் தாக்கிவிட்ட சோகம் மாறாமலேயே வளர்ந்தது. வறுமையுடன் போராடிய அந்தக் குடும்பம், குழந்தையைக் காக்கவும் போராடியது.

பிழைத்து கொள்ளும் என்ற நம்பிக்கை பிறந்த போது, பேரிடி ஒன்று தலையில் விழுந்தது போல, குழந்தையை டபுள்நிமானியா என்ற விஷஜீரம் தாக்கியது. தாக்கிய விஷஜீரம் கொடுமையான காரியம் ஒன்றைச் செய்து விட்டு ஒதுங்கிக்கொண்டது. அதாவது, கையையும் கால்களையும் அசைக்க முடியாத அளவுக்கு இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கிவிட்டு விஷஜீரம் விடைபெற்றுக்கொண்டது.