பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

விளையாட்டு உலகம்

தடுத்து நிறுத்தப் பார்க்கின்றார்கள். முடியவில்லை. என் கை போனலும் போகட்டும். இந்தச் சமயத்தில் எனது சேவை என் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. என்னுடைய கடமையை சரிவர செய்யாமல் நான் ஒதுங்கிப்போய் விடமாட்டேன். என்று அந்தத் தலைவன் தகுந்த சமாதானம் கூறி, மீண்டும் ஆடத் தொடங்கிவிடுகிறான்.

நாற்பது நிமிடங்களும் பம்பரமாகச் சுழன்று பயங்கரமாக விளையாடுகிறான், தனது சக ஆட்டக்காரர்களை யெல்லாம் உற்சாகப்படுத்துகிறான். உணர்வினை ஊட்டுகின்றான். இறுதியிலே, வெற்றியை ஈட்டித் தருகின்றான் தன் தாயகத்திற்கு. தன் தாயகம் புகழ் பெற வேண்டும் என்பதற்காகத் தன்னையே தந்திடத் தயாராக நின்றவனாக விளையாடிய அந்த மாபெரும் வீரன், பெருந்தலைவன் பெயர் தெரியுமா? ஆலன் பிரஸ்காட் என்பதுதான்.

தகுதியும் திறமையும் தான், ஒருவரைத்தலைவனாக்குகிறது. “தலைவனாக வந்து விட்டால் எல்லாம் முடிந்து போய்விட்டது. எண்ணியதும் கிடைத்துவிட்டது, இனி எப்படியிருந்தால் என்ன?” என்பதாக ஒரு சிலர் எண்ணிக்கொண்டு ஏனோ தானோவென நடப்பதால் தான், வாய்ப்பினைப் பெற்றும் வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றனர்.

தன்னே நம்பி வந்தவர்களைத் தன்னம்பிக்கையுடன் நடத்தி, தகுந்த வழிகளையும், முறைகளையும் தந்து வெற்றிக்கு வழி நடத்திச்செல்லும் விவேகத்தினால் தான் தலைவன் என்று பிறர் புகழ்கின்றார்கள்.

அத்தகைய அரிய பண்புள்ளவர்களையே உலகம் புகழ்கிறது. சரித்திரம் சான்றுகாட்டி நின்று, பெரும்