பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது பார்வையில் திருக்குறள் திருக்குறள் என்பது மறை நூல், வாழ்க்கை நூல், உலகப் பொதுமறை என்றெல்லாம் உயர்த்திப் புகழ்வார்கள். என்பார்வையில் திருக்குறள் என்பது உடலியலைப் போற்றும் வாழ்வியல் நூல் என்பதாகும். 1. அறத்துப்பால் அறம் என்றால் ஒழுக்கம். ஒழுக்கத்தை உண்மையாக நேசித்து ஒழுகுபவன் அறன். அவன் தன்னை ஒத்த ஒழுக்கமான ஒரு பெண்ணுடன் நடத்துகிற வாழ்க்கை இல்லறம். அதை விரும்பாமல் விலகி நின்றால் துறவறம். இவ்வாறு ஒழுக்கத்தோடு வாழ்வோருக்கு எப்படி எல்லாம் வழி வகைகள் இருக்கின்றன என்று, வகுத்தும், தொகுத்தும் தெளிவாகச் சொல்லப்பட்ட கருத்துக்களே அறத்துப்பாலில் இடம் பெற்றிருக்கின்றன. 2. பொருட்பால் உடல் என்றால் பொருள். பொருள் என்றால் உடல், என்றும் பொருள் உண்டு. உடலை ஊர், நாடு, தேசம் என்றெல்லாம் கூறுவார்கள். உடல் உள்ளே உலவுகிற, உலாவருகிற காற்றாகிய ஆத்மா என்னும் உயிரை, உடலுக்கு நாயகன். உன்னத தலைவன், கோட்டையின் அரசன் என்றெல்லாம் சொல்வார்கள். உடலையும், உயிரையும் ஒருசேரக் காப்பாற்றுகிற, உக்திகளிை, சக்திகளை, மரபுகளை, மறை வழிகளை, முறைகளை, போராடும் துறைகளை, வெற்றிபெறும் வினைகளை, வீரமாற்றும் கணைகளை, பேரெழுச்சி பொங்கச் சொல்கின்ற கருத்துக்களே பொருட்பாலில் இடம் பெற்றிருக்கின்றன. 3. காமத்துப்பால் வெளிப்பகையை வெல்லுகிற வழி வகைகளை விளக்கமாக விவரித்த வள்ளுவர், உட்பகையில் ஒன்றான காமத்தை, இயற்கையாக ஏற்படுகின்ற புலன் உணர்வை, புணர்ச்சி இன்பத்தை, அதற்கு அடிமை ஆகாமல், தனது ஆளுமை குறையாமல், எப்படித் துய்க்க வேண்டும்? தொடர வேண்டும் என்று இப்பாலில் கூறி விவரித்துள்ளார். iரியமும், அதற்குள்ளே மனதை மயக்கி, மடக்கிப்போடும் மந்திர மோகமுமான காமத்தை, ஒழுக்க முள்ளவர்கள் எவ்வாறு சுகமாக அனுபவிக்க முடியும் என்ற சூத்திரத்தை சொல்லும் சாத்திரமாகக் காமத்துப்பால் அமைந்து இருக்கிறது. இத்தகைய எனது பார்வையுடன்தான் இந்தப் புதிய உரை எழுதப்பட்டு இருக்கிறது.