பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா L 7 கடவுளாக வாழ்கிற குருவானவர்கள், கைம்மாறு கருதாது, மனித குலத்தைக் காத்து, வழிகாட்டி வழி நடத்துகின்றனர். மனிதர்கள் எல்லாம் புனிதர்களாக மாறி, கடவுளர்களாகிட வேண்டும் என்னும் வேட்கையிலேயே வள்ளுவர் பெருமான் கடவுள் வாழ்த்து என்று தந்திருக்கிறார். * கடவுள் சக்தியை வளர்த்துக் கொள்வதும், நிலைநிறுத்த முயல்வதும், மனிதனாகப் பிறந்தவர் ஒவ்வொருவரின் கடமையாகும் என்னும் கருத்தை, முதல் அதிகாரத்தில் முத்தாய்ப்பாக வள்ளுவர் வைத்திருக்கிறார். இந்தக் கருத்தோடு இனிவரும் குறள்களுக்கான விளக்கம் தொடர்கிறது. துறவும், அறவும், இறவும், அப்படித்தான் அமைந்திருக்கின்றன. உலகப்பற்றுக்களை, பாசங்களை, வேட்கைகளை உடலாலும் உள்ளத்தாலும் துறப்பவர்கள் துறவி என்று அழைக்கப்படுகின்றனர்.

துற உ - உள்ளும் புறமும் துறந்து விடுகின்ற முதல் நிலை அறிவோடு துறப்பவர்துற வி - துறவி. துறந்தாலும் மீண்டும் திரும்பி வருகின்ற உறுதியற்ற நிலை ஏற்படாமல், அறவே அறுத்து எறிவது அறவி என்ற இரண்டாம் நிலை. அற = உ = அறவு. உள்ளும் புறமும் ஆசையை அறுத்து எறிபவர் அறவி. அறுத்து எறிவது மட்டுமல்ல. இனிமேல் அவை உள்ளத்துள் எழாமல் இற்றுப் போகிற இறுதிநிலை. இறுநிலை-இறுதிநிலை, உறுதிநிலை, உயர்ந்தநிலை, உன்னதநிலை, அதுவே இறைநிலை. இந்த நிலைதான் இறைவன் என்று ஏற்றிப் போற்றப்படும் பெருநிலை. அப்படிப்பட்ட அற்புதமான பிறப்பெடுத்த மனிதரே கடவுள் ஆகிறார். ஆகவே அவர்களை நாம் வாழ்த்தி வணங்குவோம். என்று நம்மை வள்ளுவர் ஆற்றுப்படுத்துகிறார். மனிதக்கடவுளிடம்.