பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 19 ஆட்படுத்திச் சரணடைந்தவர். நிலமிசை = மக்கள் மத்தியிலே நீடுவாழ்வார் = நெடுங்காலம் நிறைந்து வாழ்வார். சொல் விளக்கம்: மலர் - மலர்ச்சி, எழுச்சி, களிப்பு: நிலம் = நிலத்தில் உள்ளோர் முற்கால உரை: மேலோரின், சான்றோரின் மாட்சிமை பெற்றோரின் அடிகளைச் சேர்தல் என்பது எல்லா உலக மக்களுக்கும் சிறப்பாகும். தற்கால உரை: மக்கள், மனமாகிய மலர் மீது பொருந்தியிருந்து வாழக்கூடிய சான்றோர்களின் அறிவுரையைப் பின்பற்றி வாழ்பவர்கள் உலகத்தின்கண் நிலைபெற்று இன்புற்று நீடுழி வாழ்வார்கள். புதிய உரை: எழுச்சி மிகு வளர்ச்சி நிறைந்த களிப்பான வாழ்வு வாழ்ந்து வருகிற புனிதரது ஞானத்தைப் பின்பற்றி வாழ முயல்கிற ஒருவர், வாழ்கிற காலத்து, மக்களிடையே பேரும் புகழும் பெற்று பேரின்ப வாழ்வு வாழ்வர். விளக்கம்: மலர் என்பது சிற்றின்பம் சேராத பேரின் பத்தில் மகிழ்ந்து பெறுகிற மலர்ச்சி, எழுச்சி, களிப்பு. அவ்வாறு வாழ்ந்து வருகிற குருவானவர் நடமாடும் நல்லுலக மாகத் திகழ்கிறார். அவரிடம் சரணடைந்து சகல கலைகளையும் ஆன்ம நிலைகளையும் கற்றுத் தெளிந்தோர், அதில் தேர்ந்தோர், தாம் வாழும் காலத்தில் வரையிலாப் பெயரும் புகழும் பெற்று, வாழ்ந்து வருவார். அழியாத அமரநிலை அவருக்குக் கிடைத்து விடுகிறது. -- இந்த மூன்றாவது குறள் தேர்ந்து தெளிந்து கொண்ட குருவின் ஞானத்தைப் பெறுகிறபோது ஏற்படுகிற பேருவகை நிலையினை, பிறப்பின் பயனைக் குறித்துக் காட்டுகிறது. ஒருவரது வாழ்வும் தாழ்வும் அவர் சேர்கிற இடத்தைப் பொறுத்தே அமைகிறது. அது போலவே ஒவ்வொரு மனிதரும் தான் பெற்றிருக்கிற மனித வாழ்வைப் புனித வாழ்வாக உயர்த்த வேண்டும் என்னும் உணர்வுடனே வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறார் வள்ளுவர்.