பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ØF, er i - +. s திருக்குறள் புதிய உரை 47 எத்தனைபேர் என எண்ணத் தொடங்கி, முடியாமல் கைவிடுவது போன்றது. புதிய உரை: உலகப் பற்றைத் துறந்தவர் பெருவல்லமையின் தன்மையை ஒப்புமை கூறி அறிய, இவ்வுலகத்து ஆசைகளைத் துறந்து வென்று வாழ்பவரைக் கருத்தில் கொண்டு, சான்றாக அறிய வேண்டும். விளக்கம்: ക്ലി உலகாசைகளைத் துறந்தவரின் பெருமையின் (தகுதியை) அளவைத் தெரிந்து கொள்ள, உலகத்தில் பிறந்து இறந்தாரது எண்ணிக்கையை எண்ணி அறிந்து கொள் என்பது, துறந்தாரின் பெருமையை அவமதிப்பது போலாகும். ஒன்றைப் புகழ்ந்து உயர்வாகப் பேசிட, ஒப்புமை காட்டும் பொருள், அதை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் மரபாகும். துறந்தார்க்கு இறந்தாரைப் பொருத்துவது தகைமையல்ல. இறந்தார் என்பது வையத்து ஆசைகளின் ஆற்றலை இறந்து, வாழபவா. சித்தர்கள் பெருமையைக் கூறும் போது, செத்தார் போல் சீவிக்கும் சித்தர்கள் என்று புகழ்கிறது இலக்கியம். இங்கே உடலால் துறந்தவர்களின் பெருமையை உடல் உள்ளம் உணர்வுகளால் துறந்து இறந்தவர்களாக இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பெருமையைப் புரிந்து கொள்ள வேண்டும். துறத்தல் என்பது முதல் நிலை. இறத்தல் (இறு) என்பது இறுதிநிலை. இறுதி நிலையைப் பார்க்கும் போது முதல் நிலையின் தகுதி புரிந்து விடும் அல்லவா! ஆகவேதான், இறுதி நிலைக்குரிய தகுதி என்ன என்பதை மூன்றாவது குறளில் விளக்கி அருள்கிறார் வள்ளுவர். 23. இருமை வகைதெரிந்து ஈண்டு.அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு பொருள் விளக்கம்: இருமை இரு மெய்யான உள்ளும் புறமும் வகை தெரிந்து - அவற்றின் தரமும் கூறுபாடுகளையும் முற்றும் அறிந்து தந்திரமும் மிகுந்த |