பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா -- ஈண்டு - (காலம் தாழ்த்தாது) விரைவாக அறம் பூண்டார் - (வ ாழ்க்கையின் செம்மைக்கு) ஒழுக்க நல் வினைகளையெல்லாம் ஞான நோன்புகளாகக் காப்புணியாக்கிக் கொண்டவரின் பெருமை = ஆற்றல் மிகு அறச் செயல்களால் உலகு பிறங்கிற்று - உலகின்தரம் உயர்ந்து, ஒளிர்ந்து பெருகிக் கொண்டது. சொல் விளக்கம் : இருமை = மெய்யின் இருதன்மை. உள்ளும் புறமும் வகை = தரம், வழிவகை, ஏது, கூறுபாடு ஈண்டு= இவ்விடம், விரைவு, சீக்கிரம் அறம் = ஞானம், நோன்பு,ஒழுக்கம், நல்வினை பூண் = (உலக்கைக்கு காப்புபோல) அணிதல் பிறங்கிற்று = பெருகிற்று, ஒளிர்ந்தது, உயர்ந்தது. முற்கால உரை: பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன் பவின் பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து, அப் பிறப்பறுத்தற்கு இப் பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின்கண் உயர்ந்தது. தற்கால உரை: இருவேறு இயல்புடைய இவ்வுலகியல் தெரிந்து, பற்றறுத்தல் என்னும் அறத்தைக் கொண்டவர் பெருமை, உலகில் விளங்கும் எப்பெருமையினும் பெருமை உடையதாகும். புதிய உரை: இருமெய்யான உள்புறம் ஆகியவற்றின் தரமும் தந்திரமும் மிகுந்த கூறுபாடுகளையும் முற்றும் அறிந்து விரைவாக, ஒழுக்க நல்வினைகளை ஞானநோன்புகளாகக் கொண்டவரின் ஆற்றல்மிகு செயல்களால், உலகின்தரம் உயர்ந்து, ஒளிர்ந்து பெருகிக் கொண்டது. விளக்கம்: இருமையை இம் மையும் மறுமையும் குறிப்பிடுகிறார்கள். இருமையை இருமெய் என்றும், அதையே உள்ளும் புறமும் என்றும் உணர்ந்து, அவற்றின் வெறித்தன என்று விளைவுகளின் வேகத்தைப் புரிந்து, தாமதிக்காமல் விரைந்து, அறத்தைக் காப்பாக ஏற்று, துறந்ததால் அவர்களாலே தான் இந்த