பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

33

கொள்வார்கள். நான்காண்டு காலம் மன்னனாக வாழ்ந்த வீரனும், போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுகிற வீரனையே ராணி தன் கணவனாகத் தோந்தெடுத்துக் கொள்வாள். தோற்றுப் போகின்ற பழைய மன்னன் கதி என்னவாகும் என்றால், இரண்டு காரியங்களில் ஒன்றை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்று தலைமைக் கடவுள் பீடத்திலே தன் தலையை வைத்துத் துண்டிக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். அல்லது மலை உச்சியில் வைத்துத் தள்ளிவிடும்படி மன்றாடலாம்.எப்படியும் அவன் இறக்க வேண்டியவனே.

இவ்வாறு இந்திராணியாக அந்த ராணி சிரஞ்சீவியாக வாழ, நான்காண்டுகளுக்கு ஒரு முறை பழைய வீரன் கொல்லப்பட, புதிய வீரன் மாலை சூட என்ற வழக்கம் இருந்து வந்த தாம்.

நான்காண்டுகளுக்குள் ஒரு வீரனின் அல்லது மனிதனின் பலம் குறைந்துபோய்விடுகிறது என்ற கிரேக்கர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்த, இந்தக் கதை உருவாக்கப்பட்டதோ அல்லது உண்மையாக நடந்ததோ நாமறியோம். வரலாற்றிலே இக்கருத்து காணப்படுகிறது. அந்த அடிப்படையில்தான், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டிலே நடத்தப்பெற்றன.

அதே கிரேக்க வரலாற்றில், மிலோ என்ற மல்யுத்த வீரன் தொடர்ந்தாற்போல் 6 ஒலிம்பிக்