பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 89 அழுக்கற்றவனே (பரிசுத்தமானவனே)! வேடப்பெண் (வள்ளியின்) கொங்கை மலையில் தோய்கின்ற காங்கேயனே! (கங்கா புத்திரனே) நறுமணம் கமழ்கின்ற தேவேந்திரநகர் பொன்னுலகு வாழும் பொருட்டு. பரந்த கடல் தீப்பற்றி எரியவும் அசுரர்கள் வேரோடு மாளவும் தீவினை எல்லாம் ஒழியவும் வேலாயுதத்தைப் பிரயோகித்த பெருமாளே! (இதவிய பாதாம்புயம் அருள்வாயே) 481. வினைக்கு ஈடான பிறவி தொலைவதற்கு ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும் கலக்கம் தரும் கூச்சலுக்கே இடம் தருகின்ற பொல்லாத குணத்தை உடையவருமான சமயவாதிகளின் பலவிதமான சாஸ்திர நூல்களிற் சொல்லப்பட்ட அநேக மாறுபாடுகள் கொண்டதும் பொருந்தாததுமான மனோபாவனைக்கு (மன உணர்ச்சிக்கு) (அரிதாய) எட்டாததான மவுனநிலை நிறைவு கொண்டதான உண்மை ஒளியை நான் (மாயாமலுக்கு)-இறப்பின்றி விளங்க - உபதேசித்தருளுவாயாக. தருமன் வீமன் அருச்சுனன்-நகுலன்-சகாதேவன் (ஆகிய ஐவர்க்கும்) சரண் அளிப்பவனாகி-(காப்பு அளிப்பவனாகி) போர்க்களத்தில் பராக்கிரமம் வாய்ந்த சங்கு கொண்டு நாள் ஒரு பதினெட்டில் (போர்) நிகழும்.

  • வேல் வாங்குதல் வேலைப் பிரயோகித்தல் வேல்வாங்கு வகுப்பைப் பார்க்க

f சமய தர்க்க விரோத வாதிகள் தவிர ஏற்றுவ... அநுபூதி மீமிசை திகழும் அற்புத மவுன நிர்க்குண சிவமயத் திருஞான வேழமே. "திருஞான வேழவகுப்பு).