பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 69 473. அன்றைக்கு அன்றைக்கு (நாள்தோறும்) அலங்கரித்து அலங்கரித்து அத்தத்து (தாம்பெற்ற பொருளுக்குத்தக்க) அத்தம் (பிரதி பலனைத்) தருபவராம் (அல்லது கை தருபவராம், வழிகாட்டுபவராம்) பொதுமகளிரின் பாதங்களைப் போற்றியும் விரும்பியும் (அக்கத்து அக்கம்) கண்ணுக்குக் கண்ணாய்த் - (திக்கு தொக்கு) - திக்குகள் தோறும் (எவ்விடத்திலும்) தொக்கு கூடி (இந்த உடலைப் போற்றி வளர்த்து செற்றை (கூட்டமான - நிரம்ப) (புன்சொல்) இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று, இறந்துபட்டு இறந்து பட்டுப் பிறவிகளை அடையாத வண்ணம் மேலும் மேலும் சொல்லித் துதிக்க உனது மிகக் குளிர்ச்சி பொருந்திய சிவந்த வெட்சி மலரணிந்த திருவடியைத் தந்தருளுக. நெருங்கிப் பின் தொடர்ந்து (கடலில்) இருந்த மாமரமாம் (சூரன்) பயப்பட்டுத் திடுக்கிடும்படிச் சண்டை செய்த வேலனே! பரிசுத்தத்தையும், பேரன்பையும், அழகிய கொங்கையையும் கொண்ட விண் ணுலகத்துக் கிளியாம் தேவசேனைக்கு இனிமையானவனே! திரண்ட மலையாம் கிரவுஞ்சத்தைத் தாக்கிக் குத்தி அம்மலையரக்கன் கிரவுஞ்சன் பெருங் கூச்சலிட்டு அழும்படி அதை (கிரவுஞ்சத்தை) அழித்துத் தொலைத்தவனே! (கற்புச் சத்திப் பொற்புச் சத்தி) கற்புக் கணிகலமாம் தேவி (அளித்த) அழகிய வேலை (அல்லது சத்தி (தேவி) கற்பினுடன் (கொடுத்த) வேலை. (ஏந்தும்) பெருமாளே! கச்சியிற் சொக்கப் பெருமாளே! (செச்சைக் கழல் தாராய்)