பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

19

வந்ததை அறிந்து, கைதட்டி வரவேற்றனர் பார்வையாளர்கள். அவனுக்கு வெற்றிப் பதக்கம் இல்லைதான். என்றாலும், பெலிக்சின் அஞ்சாத நெஞ்சத்தை அகிலமே வியந்து பாராட்டியது.

26 மைலுக்கு மேல் உள்ள ஓட்டத்தைத் தொடங்க 700 மைல் துாரம் ஓடி வந்து கலந்து கொண்ட வீரனின் வரலாறு, மறக்க இயலாத காவியமாக அல்லவா மாறிவிட்டது!

கியூபா நாட்டின் ஒரே பிரதிநிதியாக கலந்து கொண்ட பெலிக்ஸ், மாரதான் பந்தயத்தின் மறக்க முடியாத வீரனாகிவிட்டான். ‘ஆண்மை மிகு பந்தயங்களுக்கு ஊக்கமும், உண்மையான உழைப்பும் இருந்தால்போதும், உலகப்புகழ் பெறலாம்’ என்ற உயர்ந்த தத்துவத்தை உலகத்திற்கு வழங்கும் அஞ்சாத அஞ்சல்காரன் ஆனான்.

நாம் அந்த அரிய தத்துவத்தை ஏற்று வாழ்வில் மகிழ்வோமாக!