பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 319 உனது திருவடியைத் தினந்தோறும் மனதில் ஆசை அழியாமல் (பூரண ஆசையுடன்) நினைக்கும் வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக வில்லினின்றும் அம்பைச் செலுத்தி எதிரி (பகைவனாம்) ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போர் செய்து ஒப்பற்ற சிதையைச் சிறையில் இல்லாதவாறு செய்து (சிறையினின்று மீட்டு) இவ்வுலகில் மேம்பட்டு விளங்கின சாமர்த்தியசாலி யாகிய மஹா மாயனாம் திருமாலின் மருகனே! அலைய மேரு (மேரு அலைச்சலுற) மாசூரர் பொடியதாக (மகா சூரர் பொடிபடும்படி) வேலாயுதத்தைச் செலுத்திப் போர் புரிந்து கலாப மயில் மேல் ஏறி. நிரம்பத் தேவர்கள் சூழ உலகத்திற் புகழ்ந் தோதப்படும் திரு அருணையில் வீற்றிருக்கும் பெருமாளே! (நினையுமாறு நீமேவி அருள்வாயே) 577. இஷ்ட போகத்தை அளிக்கும் கற்பகமாகிய தெய்வ விருகூத்தையும், மேகத்தையும், பாரியையும், பொன் குவியலை) உச்சி வேளையிற் கொடுத்து வந்த (போது) (தெய்வ) மலரை வைத்திருந்த புத்திரர்களை நிகர்ப்பாய் நீ என்றும் உவமை கூறி ஒப்பிட்டு, உலக மக்களை மெச்சி, அவர்கள்மீது பிரியத்தைக் காட்டி (என்) தரித்திரம் ஒழியும்பொருட்டு, கொடை பெரிதாக (அவர்கள் தருவதற்கு நான் பெருவதற்கு ஆசுகவிகள், நல்ல சித்தரக் கவிகள் வித்தார கவிகள் ஆதிய திருட்டுக் கவிகளை (அவர்கள்மீது) பாடி

  • மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய்"

சுந்தரர் தேவாரம் -7-1-1.