பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 121 494. அறிவு இல்லாத பித்தர், உனது திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர்கள், மூடர்கள், பேயின் தன்மைகொண்ட செய்கையாளர், நன்றி அறிதல் இல்லாத பயனிலிகள் - ஆகிய இத்தகையோர் மீது சொற்கள் கொண்டு பாடல்கள் அமைத்து அவர்களைப் புகழ்ந்தும் அவரை வாழ்த்தியும் (அதன் பொருட்டுத்) திரிந்து பொருள்தேடி சிறிதளவு சேகரித்துக் கொண்டுவந்து (பொதுமகளிர் வாழும்) தெருக்களில் உலவித் திரிந்து (அப்) பெண்களுக்கு அப்பொருளை நிரம்பக்கொடுத்து, (இங்ங்னம்) வீண் காலங் கழித்து நான் திரிகின்ற போக்கால் எனக்கு வருகின்ற நிந்தை மொழி ஒழியும்படி அருளி, என்மீது அன்புகூர்ந்து, நான் தெளிவு பெற மோகூ! இன்பத்தை என்று எனக்கு அருள்புரிவாய்! இறைவரது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி அவரிடமதிருந்து பிரிந்து, இடப வாகனத்தின் மீது காஞ்சிக்கு வந்த உமையவள் தனது இருள் (அஞ்ஞானம்) நீங்கத் தவஞ்செய்து விளங்க, அந்த (அம்மையின்) தவத்தைப் பார்த்து மனம் குழைந்த (உருகின) இறைவர் கேட்டு மகிழத்தக்கதான (உபதேசச்) சொல்லை உடையவனே! குறவர்களின் கூட்டத்தில் வந்து, கிழவனாக ஒருவேடம் காட்டிப் புகுந்து நின்று, (தினைப்புனத்தில்) குருவிகளை(க் கவண் கற்களால்) ஒட்டி (அங்குமிங்கும்) திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியைத் தன் வசப்படுத்திச் சிறந்த தனது தெய்வ வடிவத்தைக் காட்டி அவளோடு சேர்ந்த பெருமாளே! குமரகோட்டம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே! (தெளிய மோகூத்தை என்று அருள்வாயே)