பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவை திருப்புகழ் உரை 183 (அலர்மேல் மங்கை) இலக்குமியுடன் திருமாலும் இன்பத்துடன் தமது மகிழ்ச்சியை எடுத்து ஒதவும், வலிமை நிறைந்த மயிலுடன் ஆடி (என்முன்) வரவேணும்; (அல்லது மயிலுடன் என்னை நாடி-விரும்பி என்முன் வரவேணும்). தாமரைமல ரொத்த கண்களை உடையவனே! தேவர் வளர்த்த மகள் - தேவசேனையின் மணவாளனே! அறிவு நிறைந்த ஞானமும் கொண்டவனே, உயர்ந்த புயங்களை உடையவனே! பொங்கின. கடலுடன், நாகம் விண்டு - எழுகிரிகள் பிளவுபட (வரை) கிரெளஞ்சகிரியின் (இகல்) வலிமையைச் சாடு - பாய்ந்தழித்த, பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலனே! (அல்லது பொன் - தேவகுரு - பிரகஸ்பதி போற்றி நின்ற கதிர்வீசு வடிவேலனே! (அல்லது பொங்கு கடலுடன் வரை ஆகம் விண்டு - கிரெளஞ்சகிரியின் உடல் (விண்டு) விள்ள - உடைபட்டழிய, அந்த மலையின் இகல் - வலிமையைச் சாடின வேலா எனலுமாம்) குளிர்ந்த முத்துமாலை அணிந்த அழகிய மார்பனே! செம்பொன்னின் அழகு செறிந்த உருவத்தனே! நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்டுள்ளவனே! முருகேசனே! எப்போதும் அடியார்களின் மனதே இடமாகக் கொண்ட பெருமாளே! குளிர்ந்த சிறுவை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (மயிலுடனாடி வரவேணும்)