பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாழ்ப்பனாயண்பட்டினம்) திருப்புகழ் உரை 271 பூமியிடத்தே புகழ் பெற்ற சத்திய (வாசகப்) பெருமாளே! திரு அரத்துறைப் பெருமாளே! (தருணிகட்ககப் படலாமோ) யாழ்ப்பாணாயன் பட்டினம் 763. பூவாலாகிய மாலையைச் சூடும் கூந்தலை உடையவர், பூங்கொத்துக்களைச் சூடும் கூந்தலை உடையவர், பார்த்தால் பார்வையானது வேல், (கட்கம்) வாள் போலவும், மன்மதன் செலுத்தும் போருக்கு என்றே நிறைந்த பெருகியுள்ள (கள் சரம்) தேன் கொண்ட பூ அம்புகள் போலவும், யமன் ஏவி அனுப்பியுள்ள தூதும் போலவும் பாய்ந்து நாள்தோறும் (யார் கையிற்) பொருள் உளதோ அந்தப் பொருள் உடையவர்கள்மீது (தாள் ஆர் தம்பற்றிடு) முயற்சி நிறையச் செய்து தம்மீது (பற்று) அன்பு வரும்படியான (ப்ரமையது) ஆசை மயத்தை ஏற்றி, மாய வித்தைகளைக் கற்றுள்ள அஞ்சனம் பூசின கண்ணினர்; வாயிதழ் அமுது ஊறல் வாய்ந்தவர்கள், மனம் மாறுபடுதல் உண்டாகும்படிப் பேசும் (பொய் விரகியர்) பொய் நிறைந்த உபாயத்தினர், நூல் தேய் நூலின் நூலிலும் தேய்ந்து மெலிந்த அல்லது (நூறாம் நம்பர் எண்ணாக) வெகு நுண்ணிதாக நூற்கப்பட நூல்போன்ற சிறிய இடை துன்பப்படும்படி (வாட்டாய் வீசும்). வாள் தாய் வீசும் - ஒளி தாவி வீசுவதும் பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, அகில், (ஆரம்) மாலை - சிறந்த ஆபரணங்கள், முத்துமாலை, ரவிக்கை இவைதமை அணிந்துள்ள கொங்கையினர் . இவர்கள்மேல் வேட்கை (ஆசை) பூண்டு, உடல்நலம் கெட்ட என்னை உனது சத்தியவாக்கால் நான் ஞானத்தை அடைந்து இனி (உன்னை) வழிபடுமாறு திரு அருள் புரிய மாட்டாயா! தாய், திருமாலின் தங்கை, (கனிகை) கன்னிகை, உமை, நடனம் செய்யும் ஆனந்த சிவாம்பிகை, திரிபுரை, தான் ஆளும் பேய்களும் பூதங்களும் சுற்றியுள்ள பயிரவி, (புவனேசை) புவனங்களுக்கு ஈசுவரி,