பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 393 குருடிகள் சிரித்துக்கொண்டே தமது இஷ்டத்தைப் (புலம்பு வெளியிடுகின்ற (அடிக்கடி முறையிடுகின்ற) (கள் உதடிகள்) கள்ளுண்ட உதட்டினர், (பெற்ற பொருளைக்) கணக்குப் பார்த்துப் பார்த்துப் பிணக்கம் கொள்பவர்கள், தந்திரவாதிகள், மருந்து வைத்து மயக்கும் கொடிய குணத்தினர். கன்களைக் கொண்டே (கண்பார்வையைக் கொண்டே). (தம்மாட்டு) இழுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தவர்கள், மினுக்க்ப்பட்ட - துலக்கப்பட்ட வளையல்களின் ஒலித்தலைக் கொண்டவர்கள், நடனமும் நடித்து விளங்கி ஓங்கும் (சண்டிகள்) பிடிவாத குணத்தினர், குணமோ முழுமையும் சுத்த (அசங்க்ய) அசிங்கமான - அவலக்ஷணமான (அல்லது *கணக்கிலாத) சம்பந்தம் உடையவர்கள் அத்தகைய பொதுமாதர்களின் உறவாமோ! சம்பந்தம் ஆமோ! கூடாது எனறபடி ரிசுதிகள் இனத்தோர் (நெருக்கமும்) கூட்டமும், பதவியிலிருக்கும் பிரமன் (படைத்த) மண்ணுளோர் கூட்டமும் சுகம் பெற்றிருந்த தேவர்களின் கூட்ட மிகுதியும் (எல்லாம்) நிலைகுலைய வந்த சூரர்கள். o யானைக் கூட்டங்களுடன் பேதம் கொள்ளும் (பகை கொள்ளும்) சிங்கங்களும் (அவை பூட்டப்பட்ட தேர்களும் எந்தத் திக்கிலும் பிளவு உண்டு அழிய, குதிரைகள் தேரில் பூட்டப்பட்டன உடல் நாசம் அடைந்து அழியச் செலுத்தின வேலாயுதனே! (நர) சிங்கத்தையும் யானையையும் தோல்) உரித்து மன்மதனும் திரிபுரமும் எரிபட்டு அழியச் சிரித்து (அல்லது மன்மதனுட்ைய (புரம்) உடல் எரிபட்டு அழியச் சிரித்து), பிரமனுடைய தலையை ஒரு கணக்காக அறுத்தும், முன்பு பிரமகபாலத்தை அணிந்த்வருமான சிவபிரான் தந்தருளிய தலைவனே! எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்டமுலை எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ்" - பட்டினத்தார். வெண்பா.