பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குரங்காடுதுறிை திருப்புகழ் உரை 589 கூட்டமாயுள்ள இந்திரன் ஆதிய தேவர்களுக்கும், வளப்பம் கொண்டுள்ள பெரிய சேன்ையை உடையவர்களாம் அரசர்களுக்கும். (அல்லது, வளப்பெருஞ் சேனை உடையவர்களாகிய இந்த்ராதி யமரர்களுக்கும்), நினைத் துத் துதிக்கும் என்னைப் போன்ற அடியர்களுக்கும் பெருஞ் செல்வமாய் விளங்குபவனே! நிறைந்துள்ள மந்தாரைமலர், மகிழம்பூ இவைகளைக் கொண்டு நிரம்பி விளங்கும் குளிர் ந்த சோலைகள் வகை வகையானவையும், கலக்கி ஜலம் நிறைந்துவரும் ஆறானது பல துறைகளிலும். அலையாகிய கரங்களை வளைத்துப் புதிய மணிவகைகளைக் கொண்டு தள்ளுகின்ற பக்கங்களையும், வயல்களையும் அணிந்துள்ள திருக்குரங்காடுதுறை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே (மருளது தவிர்வேனோ) 885. குடங்கள் (இரண்டு) வரிசையாய் அமையப் பெற்றது போல விளங்கும் (தடங்கள்) கொங்கையிடங்களைக் கருதி, ஆங்கே (ஆரவடங்கள்) முத்து மாலைகள் பொருந்த அசைத்தவர்களுடைய (செய்ய) செம்மை வாய்ந்த அல்லது (ஜெய வெற்றி விளங்கும் (நீலம்) நீலோற்பலம் போன்ற கண்கள். காது வளர்க்கும் தக்கை (அல்லது காதணி) உள்ள இடத்திலே விளக்கமுற்று, வடிந்த நீண்ட குழைகளைக் (காதுகின்ற) வெட்டுவதுபோலப் பாய்கின்ற குளிர்ந்த முக தரிசனம் (முகத்தோற்றம்) என்னும் வலையாலே உடம்பானது (கெட்டு) மிகவும் கூன் அடைந்து, நடையும் மிகச் சரிந்து, (உடலும்) மிகக் கெட்டுக் கையிற் கோலும் நீங்காமல். தூங்கி விழித்துக் கொண்டதுபோன்ற (இப்போது) பிறந்துள்ள இப் பிறப்பாவது திண்மை (ஞானம்) பெறும்படியாக உனது அழகிய திருவடியைத் தந்தருளுக்