பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1042

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறிை திருப்புகழ் உரை 483

  • இன்பகரமாய்ப் பேசும் சூதான மொழிகள் மிகுதியாய் (அகைத்திடும்) கிளைத்து எழுகின்ற பொருளாசை என்கின்ற பறவை, பிறர் தெளிவு பெறச்சொன்னாலும் - அறிவுறுத்தினாலும் - தெளியாமல், மேலும் மேலும் பறப்பதாயிருக்க பிரபஞ்ச - மாயை என்பது

அதிகரித்து வந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின் (உளைப்புடன்) வருத்துதலோடு - இவைகள் செய்யும் வேதனைகளுடன் - பலவகைய வாயுக்களும் அதிகரித்து, இருக்கின்ற பலத்தைச் சில நாள்களுக்குள் ஒடுக்கித் தடிமேல் கை ஊன்றுவதாய்ப் பிடித்து நடப்பதான பல நாள்கள் செல்ல, குரங்குக் கூட்டத்தவன் இவன் என்று சொல்லும்படியாக, உடல் கூனி, (சத்துக்கள்) அடங்கி, (இறுதியாக) பிசக்கு - பிசகு அழிவு வந்திடும் சமயத்தில், (தைரியத்தை இழந்து) பின்பு அஞ்சுவதான இந்த (உடல்) தேகம் ஆமோ (பிறவி வேண்டாம் என்றபடி) தரித்த னந்தன...டுடுடி மிண்டிட் என ஒலிக்கின்ற தாளத்துடன் தனத்த குந்தகு தானன தந்தக் கென்று கோபித்து எழுந்து வந்த சூரனுடைய உடல் அழியவும், (சலத்துடன்) கடல் வற்றிப்போவதுடன் (அல்லது நடுக்கத்துடன்) எழுகிரி, கிரெளஞ்சம் பொடிபடவும் செலுத்தி நின்ற வேலாயுதனே! தலையுடன் (தலை வணக்கத்துடன்) கரம் - கையானது, ஏடு-மலர் ஏடுகளை (மலர்களை)ப் பொழிந்து, (இரைத்து வந்து) போற்றிசெய்யும் ஒலியுடன் வந்து தேவர்கள் (உன்னை) வணங்குவதால் அவர்களுடைய தலையில் மணக்கின்ற மாலைகளின் நறுமணத்தைப்பெற்ற அழகிய திருவடிகளை உடையவனே!