பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முருகவேள் திருமுறை (1 திருமுறை காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கனை யாழியு டன்கட கந்துலங் கும்படி காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு மயலாலே வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித மாகந டந்தவர் பின்திரிந் துந்தன மார்பில முந்தஅ ணைந்திடுந் துன்பம துழலாதே வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு வாழநி தம்புனை யும்பதந் தந்துன தருள்தாராய்; போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே! பூகமு டன் திகழ் சங்கினங் கொண்டகி ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள் பூவைக ருங்குற மின்கலந் தங்குப னிருதோளா. தீதகமொன்றினர் வஞ்சகந் துஞ்சியி டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு திறலோனே! சீதள முந்தும ணந்தயங் கும்பொழில் சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி தேவர்ப னிந்தெழு தென்பரங் குன்றுறை பெருமாளே ! (9) 1. கிண்கிணி மாலை - சதங்கை மாலைபோலக் கடப்ப மலராற் புனையப்பட்ட மாலை 2. சங்கினங் கொண்ட சங்கின் அம்(அழகு) கொண்ட அல்லது, சங்கு இனம் கொண்ட