பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 முருகவேள் திருமுறை (2- திருமுறை 21. ஒன்றைப் பெற "புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் "புகல்வோனும் திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் தரவேணும்: "தகரத் தந்தச் சிகரத் தொன்றித் "தடநற் கஞ்சத் துறைவோனே! தருணக் கொங்கைக் குறவிக் கின்யத் தையளித் தன்புற் றருள்வோனே! பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்° படியிற் சிந்தத் தொடும்வேலா! பவளத் துங்கப் புரிசைச் செந்திற் பதியிற் கந்தப் பெருமாளே! (6) 1. புகர் - புள்ளி, புங்கம் - உயர்ச்சி, குன்று - வெள்ளை யானை, பொலிவோன் - இந்திரன். 2. புகல்வோன் - பிரமன். 3. தகரத் தந்தச் சிகரம் - தகரவித்தை யென்கின்ற வேதசிரோ முடியாகிய ப்ரும்ம ஸ்தானம். 4. தட நற் கஞ்சம் இருதய கமலம் 5. குன்று - கிரெளஞ்சம்:குருகு பெயர் பெற்ற கன வடசிகளி பட்டுருவ வேல் தொட்ட- வேடிச்சி காவலன் வகுப்பு; கனம் பொன். 3